அனைவருக்குமான தீபாவளிக் கொண்டாட்டம்

இர்­‌‌‌ஷாத் முஹம்­மது

சாலை­யோ­ரம் காரை ஓட்­டிச்­செல்­லும் போது கடும் வெயி­லில் அய­ரா­மல் வேலை­செய்­யும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளைப் பார்த்­தால் அரு­கில் இருக்­கும் கடைக்­குச் சென்று ஒரு பெட்டி 100பிளஸ் பானத்தை வாங்கி அவர்­க­ளுக்கு வழங்­கு­வது 23 வயது பிருந்தா சிவ­பா­ல­னின் வழக்­கம்.

இவ­ரது குடும்­பத்­தி­னர் அனைவருக்குமே இது இயல்­பான பழக்­கமும்கூட. அதற்கு மூல­கா­ர­ணம் அவ­ரது தாயார் திரு­மதி பிரேமா சிறு­வ­யது முதல் தமது மூன்று மகள்­க­ளுக்­கும் புகட்­டிய பாடம்.

பாலர் பரு­வத்­தி­லி­ருந்து வாடிக்­கை­யாக செய்து வரும் அந்­தச் செயல் இவ்­வாண்டு தீபா­வ­ளியை முன்­னிட்டு பெரும் திட்­ட­மாக உரு­வெ­டுத்­துள்­ளது.

சென்ற மாதத் தொடக்­கத்­தில் பிருந்­தா­வும் அக்கா பிர­தீபா, தங்கை பிரி­யங்கா, அம்மா பிரேமா ஆகி­யோ­ரும் வீட்­டின் வர­வேற்­ப­றை­யில் அமர்ந்து இந்தத் தீபாவளிக்கு வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு அன்­ப­ளிப்பு களை வழங்கி கொண்­டாட்ட உணர்­வைப் பரப்­ப­லாம் என்று கலந்­து­ரை­யாடி முடி­வு­செய்­த­னர். பாது­காப்­புத் துறை­யில் நிறு­வ­னத்தை நடத்­தி­வ­ரும் தந்­தைக்கு மிகுந்த வேலைப் பளு இருப்­ப­தால் இவர்­களே இந்­தத் திட்­டத்தை முன்­னெ­டுத்­த­னர்.

நன்றி சொல்ல ஒரு நல்ல வழி

"வசதி குறைந்­த­வர்­கள், தேவை உடை­ய­வர்­கள், மூத்­தோர் என பல நிலை­க­ளி­லும் உள்ள மக்­க­ளுக்கு அர­சாங்க அமைப்­பு­களும் இதர அமைப்­பு­களும் உதவி வரு­கின்­றன. வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு அது­போன்ற உதவித் திட்­டங்­கள் இருந்­தா­லும் கிட்­டத்­தட்ட இரண்டு ஆண்­டு­ களா­கத் தங்­கள் குடும்­பத்­தி­னரை அவர்­கள் பார்க்­க­வில்லை.

"அத்­து­டன் தங்­கு­வி­டு­தி­யி­லேயே முடங்­கிக் கிடக்­கும் நிலை­யும் அவர்­க­ளுக்கு மிகுந்த மன அழுத்­தத்­தைத் தந்­தி­ருக்­கும். இவ்­வ­ளவு சிர­மத்­தில் நம் நாட்­டுக்­காக இவர்­கள் வியர்வை சிந்தி உழைக்­கின்­ற­னர். அதற்கு நன்றி சொல்­லும் வித­மாகவும் இந்­தத் தீபா­வளி பண்­டி­கை­யின்­போது நாமும் அவர்களு­டன் கொண்­டாட்ட உணர்­வைப் பகிர்ந்­து­கொள்­வது சிறப்­பாக இருக்­கும் என்று கரு­தி­னோம்," என்­றார் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மனி­த­வள நிர்­வா­கத் துறை­யில் இளங்கலைப் பட்­டப் படிப்பைப் பயின்­று­வ­ரும் பிருந்தா.

சரா­ச­ரி­யாக ஒரு­வ­ருக்கு $10 என்று தீர்­மா­னித்து, ஊழி­யர்­கள் 100 பேருக்­குப் பைகள் வழங்­க­லாம் என்­றும் திட்­ட­மிட்­ட­னர். தங்­க­ளின் சேமிப்புடன் உற­வி­னர்­கள், நெருங்­கிய நண்­பர்­கள் சில­ரி­ட­மும் நன்கொடை பெற்­ற­னர்.

என்­னென்ன வாங்­கு­வது என்­பது குறித்த நுணுக்­க­மான பட்­டி­யல் தயா­ரா­னது. முறுக்கு, 'மிக்­சர்', கடலை மிட்­டாய் உட்­பட நான்கு வகைப் பல­கா­ரங்­கள், இரண்டு 'கேன்' 100பிளஸ், மசாலா தேநீர் பாக்­கெட், சமை­ய­லுக்­கான இரு வகை மசாலா தூள் பொட்டலங்­கள் என இவை அனைத்­தை­யும் அடங்­கிய அன்­ப­ளிப்­புப் பைக­ளைத் தயார் செய்­த­னர்.

எதிர்­பார்த்­த­தை­விட இரட்­டிப்­புத் தொகை

'வாட்ஸ்­அப்' மூலம் அனுப்­பிய குறுஞ்­செய்­தி­க­ளுக்கு வர­வேற்­பும் இந்த மக­ளிர் அணியை மனம் குளி­ரச் செய்­தது. எதிர்­பார்த்த $1,000ஐக் காட்டிலும் இரட்­டிப்பு தொகை கிடைத்­தது. $2,000ஐத் தாண்­டிய நன்­கொ­டைத் தொகை சேர்ந்­தது.

மொத்­தம் 150 ஊழி­யர்­க­ளுக்­காக இன்­னும் அதி­க­மான பொருட்­களை அடங்­கி­ய­பை­களைத் தயார் செய்­யத் தொடங்­கி­னர். இணை­யம் மூலம் மொத்த விநி­யோக நிறு­வ­னங்­க­ளைத் தொடர்­பு­கொண்டு பொருட்­களை வாங்­கி­னர்.

இவர்­க­ளின் நெருக்­க­மான நண்­பர்­கள் இரு­வர் வீட்­டிற்கு வந்து பைகளில் பொருட்களை வைக்க கைகொ­டுத்­த­னர்.

பரிசுப் பொட்டலங்களைத் தயார்செய்யும் அனைத்து வேலை­களையும் வீட்­டி­லேயே செய்த இவர்­கள் கடந்த மாதம் 30ஆம் தேதி அவற்றை விநி­யோ­கித்­த­னர்.

பிருந்தா அண்­மை­யில் புதிய வீட­மைப்புப் பேட்டை கட்­டு­மா­னத் தளத்­தில் பணி­யாற்­றிக்­கொண்­டி­ருந்த ஊழி­ய­ருக்­குப் பானம் வழங்­கி­ய­போது தமது திட்­டம் பற்றி பகிர்ந்­தார். அத்­து­டன், அவ­ரது நண்­பர்­கள் தொடர்பு எண்­க­ளை­யும் வாங்­கி­வந்­தார்.

அந்­தத் தொடர்­பு­க­ளைக் கொண்டு ஜூரோங் பெஞ்சுரு தங்­கு­வி­டுதி 1, சுவா சூ காங், பொங்­கோல் ஆகிய மூன்று தங்­கு­வி­டு­தி­க­ளுக்­கும் காரில் சென்று அன்­ப­ளிப்­புப் பைகளை வழங்கி வந்­த­னர்.

"குடும்­பத்­தி­ன­ரு­டன் சென்று அன் பளிப்­புப் பைகளை வழங்­கும்போது அவர்­கள் முகத்­தில் நாங்­கள் கண்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தையே இல்லை. அதில் எங்­க­ளுக்­குக் கிடைத்த மன­நி­றைவே இந்த தீபா­வ­ளிக் கொண்­டாட்­டத்­தில் எங்­க­ளுக்­குக் கிடைத்த பெரு­ம­கிழ்ச்சி," என்­றார் பிருந்தா.

கிரு­மித்தொற்­றுக் கட்­டுப்­பா­டு­க­ளால் வீட்­டில் உற்­றார் உற­வி­னர்­களை அழைத்து இவ்­வாண்டு பெரி­ய­ள­வில் கொண்­டாட முடி­ய­வில்லை. எனி­னும், தங்­கள் இல்­லத்­தை­யும் தாண்­டிய கொண்­டாட்­டம் இவ்­வாண்டு இக்­கு­டும்­பத்­துக்­குக் கிடைத்­தது.

அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய முழு­மை­யான குதூ­கலத்தைத் தந்ததிலும் பெற்­ற­திலும் நெகிழ்ச்சி­ய­டைந்­துள்­ள­னர் இவர்கள்.

"இந்த நிச்­ச­ய­மற்ற காலத்­தில் ஒவ்வொரு­ வ­ரும் ஏதோ ஒரு விதத்­தில் சவால்­களை எதிர்­நோக்­கு­கின்­றோம். இப்­ப­டிப்­பட்ட சூழ­லில் நம்­மால் முடிந்த சிறு வழி­களில் நாம் காட்­டும் அன்பு, சிலருக்கு மிகப்பெரி­ய உதவியாக இருக்­கும்," என்று பிருந்தா குறிப்பிட்டார்.

இந்த அன்­பும் பரி­வும் பர­வ­வேண்­டும் என்ற எண்ணத்தில் அன்­ப­ளிப்­புப் பைகள் வழங்­கி­ய­தைத் தமது இன்ஸ்­ட­கி­ராம் பக்கத்­தில் பதி­விட்ட பிருந்­தா­விற்கு மேலும் நெகிழ்ச்சி காத்திருந்தது.

"என் நண்­பர்­கள் பலர் இப்­போது என் சமூக ஊட­கத் தளத்­தில் தொடர்­பு­கொண்டு தாங்­களும் இத்­திட்­டத்­தில் இணை­ய­ விரும்பு­வ­தா­க­க் கூறினர். வரும் காலங்­களில் தங்­க­ளை­யும் ஈடு­ப­டுத்­திக்­கொள்ளு­ மா­றும் என்னைக் கேட்டனர்.

"இதுபோல அனை­வ­ரும் அவ­ர­வர் பங்கை ஆற்றினால் இந்த உல­கம் இன்னும் அழகாகும்," என்றார் பிருந்தா. அடுத்­த­தாக எதிர்­வ­ரும் ஜன­வரி மாதம் பொங்­கலை முன்­னிட்டு அன்­ப­ளிப்­புப் பைகள் வழங்க திட்­டம் தீட்ட உள்­ள­தா­க பிருந்தா கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!