மு.தங்கராசன் படைப்புகள் கருத்தரங்கம்

சிங்­கப்­பூ­ரின் மூத்த எழுத்­தா­ளர் களில் ஒரு­வ­ரான அம­ரர் மு. தங்­க­ரா­ச­னின் (படம்) படைப்­பாக்­கங்­களை ஆய்­வுப் பொருண்­மை­யா­கக் கொண்டு பன்­னாட்­டுக் கருத்­த­ரங்­கம் வரும் சனிக்­கி­ழ­மை­யன்று (13/11/2021) தமிழ் நாட்­டின் மதுரை நக­ரில் உள்ள உல­கத் தமிழ்ச்­சங்­கத்­தில் நடை­பெற இருக்­கிறது.

மதுரை உல­கத் தமிழ்ச் சங்­கம், குறிஞ்சி தமிழ்ப் பண்­பாட்டு ஆய்வு மையம் ஆகி­ய­வற்­றின் முயற்­சி­யில் இப்­பன்­னாட்­டுக் கருத்­த­ரங்­கம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

கடந்த 50 ஆண்­டு­க­ளுக்கு மேலா­கத் தமி­ழா­சி­ரி­ய­ராக சேவை­யாற்­றிய மு. தங்­க­ரா­சன், கலை, இலக்­கி­யத்­தி­லும் தீவிர ஈடு­பாடு கொண்­டி­ருந்­த­வர். தமி­ழ­வேள் நாடக மன்­றம் என்ற அமைப்பை நிறுவி நாட­கங்­களை மேடை­யேற்­றி­ய­து­டன், கவிதை, சிறு­கதை, நாட­கம், கட்­டுரை என 40 நூல்­களுக்கு மேல் எழு­தி­யுள்­ளார்.

இந்த ஆண்டு ஜன­வரி மாதம் தமது 86வது வய­தில் மர­ண­ம­டைந்த அவ­ரது இலக்­கி­யப் பணியை சிங்­கப்­பூ­ருக்கு அப்­பால், உலக அரங்­கில் அறி­மு­கப்­ப­டுத்­தும் நோக்­கில் இந்த அனைத்­து­ல­கக் கருத்­த­ரங்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

பல்­வேறு நாடு­க­ளைச் சேர்ந்த ஆய்­வா­ளர்­கள், பேரா­சி­ரி­யர்­கள் சிங்­கப்­பூர் தேசிய நூலக இணை­யப்­பக்­கத்­தின் துணை­கொண்டு தமி­ழ­றி­ஞர் மு. தங்­க­ரா­ச­னா­ரின் நூல்­களை பார்­வை­யிட்­டுத் தம் ஆய்­வுக்­கட்­டு­ரைக்கு ஏற்ற வகை­யில் நூல்­க­ளைத் தெரி­வு­செய்து ஆய்­வுக்­கட்­டு­ரை­க­ளைப் படைத்­தளித்­துள்­ள­னர். நூற்­றுக்­கும் மேற்­பட்ட ஆய்­வுக்­கட்­டு­ரை­கள் இக்­கருத்­த­ரங்­கிற்­கெ­னச் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன. அவை இரண்டு தொகுதி­க­ளாக நூல் வடி­வில் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளன.

மு. தங்­க­ரா­ச­னின் நூல்­களில் வெளிப்­படும் மொழிப்­பற்று, சமு­தா­யப் பார்வை, வாழ்­வி­யல் நோக்கு, கவித்­து­வம் முத­லான கூறு­களை நன்­மு­றை­யில் ஆய்­வு­செய்து படைப்பு­கள் அமை­யப்­பெற்­றுள்­ளன.

இக்­க­ருத்­த­ரங்­கின் தொடக்க விழா­வில் உல­கத் தமிழ்ச் சங்­கத்­தின் இயக்­கு­நர், முனைர் தா. லலிதா தலை­மை­யு­ரை­யும், சிங்­கப்­பூ­ரின் தமி­ழ­றி­ஞர் முனை­வர் சுப. திண்­ணப்­பன் வாழ்த்­து­ரை­யும் வழங்­க­வுள்­ள­னர். மேலும் பேரா­சி­ரி­யர் சால­மன் பாப்­பையா சிறப்­புரை ஆற்­று­கி­றார்.

கருத்­த­ரங்­கின் நிறைவு விழா­வில் மதுரை காம­ரா­ஜர் பல்­க­லைக்­கழக, தமி­ழி­யற்­பு­லத்­தின் மேனாள் தலை­வர், முனை­வர் மு. மணி­வேல் தலை­மை­யு­ரை­யும் காந்­தி­கி­ராம கிரா­மி­யப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் தமிழ்த்­து­றை­யின் தலை­வர் முனை­வர் ஒ. முத்­தையா வாழ்த்­து­ரை­யும் சிங்­கப்­பூர்த் தமி­ழா­சி­ரி­யர் சங்­கத்­தின் ஆலோ­ச­க­ரும் முன்­னாள் தலை­வ­ரு­மான திரு சி சாமிக்­கண்ணு அனு­பவ உரை­யும் வழங்கு­கின்­ற­னர்.

சாகத்­திய அகா­டமி விருது பெற்ற எழுத்­தா­ளர் சோ.தர்­மன் சிறப்­புரை ஆற்­ற­வி­ருக்­கி­றார். கருத்­த­ரங்­கில் மெய்­நி­கர் வழி­யில் பங்­கேற்க: Zoom ID : 555 666 1997 Password : 1991009

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!