சிறகுகள் விரிக்கலாம், சிரமமின்றி பறக்கலாம்

தமிழ்­நாட்­டின் பட்­டுக்­கோட்­டை­யைச் சேர்ந்த திரு­மதி ராஜேஸ்­வரி மாரி­யப்­பன் உடல்­ந­லக் குறை­வால் பாதிக்­கப்­பட்டு இதய அறுவை சிகிச்சை செய்­வ­தற்­காக சிங்­கப்­பூரில் கட்­டு­மா­னத் துறை­யில் பணி­பு­ரி­யும் தன் மகன் மா.பார்த்­தி­பன் வரு­கைக்­காக ஏங்­கிக் காத்­தி­ருக் கிறார். ஆனால் உட­ன­டி­யாக இங்­கி­ருந்து ஊருக்­குச் செல்ல முடி­யாத திண்­டாட்­டத்­தில் மனம் சீர்­கு­லைந்த நிலை­யில் இருக்­கி­றார் பார்த்­தி­பன்.

ஒரு வார­மாக முயற்சி செய்­தும் எந்த விமா­னப் பய­ணச்சீட்­டும் கிடைக்­காத நிலையில் கடந்த வியா­ழக்­கி­ழமை இரவு 'ஏர் இந்­தியா எக்ஸ்­பி­ரஸ்' நிறு­வ­னம், 'வந்தே பாரத்' மீட்பு விமா­னச் சேவை­யின் டிசம்­பர் மாத அட்­ட­வ­ணையை வெளி யாக்­கி­ய­தும் டிசம்­பர் முதல் வாரத்­தில் திருச்சி செல்வ­தற்­கான விமா­னச்சீட்டை முந்­திக்கொண்டு வாங்கி­விட்­டார் அவர்.

தம் தாயார் அறுவைச் சிகிச்­சைக்­குச் செல்­லும் முன்­னர் நம்­பிக்­கை தரு­வ­தற்­கும் மன ஆறு­தல் பெறு­வ­தற்­கும் சொந்த ஊர் செல்­லத் திட்­ட­மிட்­டார் நான்கு ஆண்­டு­ க­ளுக்­கு முன்­னர் சிங்கப்பூர் வந்த பார்த்திபன், 35.

"கடந்த ஒரு வார­மாக மிகவும் சிரமப்­பட்­டேன். இந்­தி­யா­விற்­குச் செல்ல எந்த நேரடி விமா­னச் சேவை­யும் இல்லை. இலங்கை வழி­யா­கவோ துபாய் வழி­யா­கவோ திருச்சி செல்­ல­லாம் என்று சில பயண முகவர்கள் சொன்­னார்­கள்," என்று கூறிய பார்த்­தி­பன், ஒருவழி பயணச் சீட்டின் விலை $600 முதல் $800 வரை இருந்­தது என்­றார்.

சிங்­கப்­பூ­ர­ரான பால­கு­ம­ரன் கிரு­‌ஷ்­ணன், 48, தம் உற­வி­னர்­

க­ளைச் சந்­திக்­க­வும் இயற்­கையை ரசிக்­க­வும் விடு­மு­றை­யைக் கழிக்­க­வும் ஆண்­டுக்கு ஒன்று அல்­லது இரண்டு முறை தமிழ்­நாட்­டிற்­குச் செல்­வது வழக்­கம். பல ஆண்­டு

­க­ளாகச் செய்து வந்­ததை கொரோனா காலத்­தில் நிறுத்த வேண்­டி­ய­தா­யிற்று.

ஆனால் தடுப்­பூ­சி போட்­டோ­ருக்­கான பய­ணத்­த­டத் திட்­டத்­தின் அறி­விப்பு வந்­த­வு­டன் இந்­தி­யா­வின் பாண்­டிச்­சேரி, தஞ்­சா­வூர், ஊட்டி போன்ற இடங்­க­ளுக்­குச் சென்று வர மீண்­டும் ஆசை பிறந்துவிட்­ட­தா­கக் கூறி­னார் பொறி­யாளரா­கப் பணி­பு­ரி­யும் அவர்.

சிங்­கப்­பூ­ருக்­கும் இந்­தி­யா­விற்­கும் இடை­யில் 'விடி­எல்' எனப்­படும் தடுப்­பூ­சி போட்­டோ­ருக்­கான பய­ணத்­த­டத் திட்­டம் இம்­மா­தம் 29ஆம் தேதி தொடங்­கும் என போக்­கு­

வ­ரத்து அமைச்­சர் எஸ்.ஈஸ்­வ­ரன் கடந்த திங்­கட்­கி­ழமை அறி­வித்­தார்.

அதன்­படி, மற்ற நாடு­க­ளு­டன் சிங்­கப்­பூர் செயல்­ப­டுத்­தி­வ­ரும் 'விடி­எல்' திட்­டங்­கள் போலவே தடுப்­பூ­சி போட்­டோர் இல்­லத்தனிமை உத்­த­ர­வை நிறைவேற்றும் அவசியம் இருக்காது.

சென்னை, மும்பை, புது­டெல்லி ஆகிய மூன்று நக­ரங்­க­ளி­லி­ருந்து தினமும் இரண்டு விமா­னச் சேவை­கள் இத்­திட்­டத்­தின்­கீழ் இயக்­கப்­படும் என்­றும் அமைச்­சர் விளக்­கி­னார்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் கார­ண­மா­கச் சென்ற ஆண்டு ஏப்­ரல் மாதம் முதல் சிங்­கப்­பூ­ருக்­கும் இந்­தி­யா­விற்­கும் சாதா­ரண பய­ணி­கள், வர்த்­தக விமா­னச் சேவை­கள் நிறுத்­தப்­பட்­டன.

அப்­போது இந்­தி­யா­வில் சிக்­கித் தவித்த சிங்­கப்­பூர்­வா­சி­களை மீட்க சிங்­கப்­பூர் விமா­னச் சேவை­கள் சில இயங்­கின.

"தொழில் சார்ந்த பணி­க­ளுக்­காக இந்­தியா சென்­றி­ருந்­தேன். அப்­போது இவ்­வ­ளவு சிக்­கல் ஏற்­படும் என்று தெரி­ய­வில்லை. பின்­னர் 'ஸ்கூட்' விமா­னச் சேவை மூலம் அர­சாங்­கம் மீட்­புப் பய­ணத்தை ஏற்­பாடு செய்­தி­ருந்­ததை அறிந்து அதில் பதிவு செய்து ஒரு வழி­யாக சிங்கப்பூர் வந்து சேர்ந்­தேன்," என்­றார் தொழில்­மு­னை­வர் வீ.அன்­ப­ழ­கன்.

அன்­று­மு­தல் இன்­று­வரை இரு நாடு­க­ளை­யும் இணைக்­கும் பய­ணி­கள் சேவைக்கு மூலா­தா­ரம் 'வந்தே பாரத்' மீட்பு விமா­னச் சேவை­களே. அத­னு­டன் அவ்­வப்­போது தனி­

ந­பர்­கள், முக­வர்­கள் தனி­யார் குத்­தகை மூலம் ஓரிரு விமா­னப் பய­ணங்­களை ஏற்­பாடு செய்­துள்­ள­னர்.

ஏர் இந்­தியா, ஏர் இந்­தியா எக்ஸ்­பி­ரஸ் ஆகிய நிறு­வ­னங்­கள் வந்தே பாரத் விமா­னச் சேவை­களை இயக்கி வரு­கின்­றன.

"அடுத்த வாரம் முதல் செயல்பட இருக்­கும் விடி­எல் திட்­டம் ஒரு­வகை மன­நிம்­ம­தியை எங்­க­ளைப் போன்­றோ­ருக்­குத் தந்­துள்­ளது," என்­றார் சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வாசி யான முத்­தையா குழந்தை.

சொந்­தத் தொழில் நடத்­தி­வ­ரும் அவர், தம் மனைவி, மக­ளு­டன் 20 ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூ­ரில் வசிக்­கி­றார். அவ­ர்தம் பெற்­றோர், சகோ­த­ரர்­கள், சகோ­த­ரி­கள் அனை­ வ­ரும் தமிழ்­நாட்­டின் மது­ரை­யில் வசிக்கின்­ற­னர். ஆண்­டுக்கு இரு முறை மதுரைக்குச் சென்று வரு வதை வழக்கமாக் கெண்டிருந்தார் அவர்.

சிங்­கப்­பூ­ரில் தற்­போது வசிக்­கும் இவரைப் போன்றோருக்கு இல்­லத் தனிமை உத்­த­ரவு இல்லாத விடி­எல் திட்­டம் பெரும் வர­மாக அமை­யும் என்­றா­லும் இங்­கி­ருந்து இந்­தி­யா­ செல்வதற்கான விமானப் பய­ணச் சேவை­கள் தேவையான அளவுக்கு இல்லாதது வருத்­தத்தை யும் விரக்தியையும் தரு­வ­தா­க­க் கூறுகின்றனர்.

"அவ­ச­ரமாக இந்தியா செல் கி­ற­வர்­க­ள் பாடு திண்­டாட்­டம்தான். என் நண்­ப­ரின் தாயார் இறந்­துவிட்ட செய்தி கிடைத்து அவர் தவித்த நிலை­யில் திருச்சி அல்­லது சென்­னைக்கு டிக்­கெட் வாங்க முயன்ற போது எங்கும் கிடைக்கவில்லை," என்று சென்ற வாரம் நடந்த சம்­ப­வத்­தைப் பற்றி விவ­ரித்­தார் வீரன் ரவிச்­சந்­தி­ரன், 62.

இத்தகைய சூழலில் விடி­எல் திட்­டம் இந்­தி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்­கு பல்வேறு கார­ணங்­க­ளுக்­காக வர காத்­தி­ருப்­போ­ருக்கு நம்­பிக்­கை தரும் நற்­செய்­தி­யா­கவே உள்­ளது.

"சிங்­கப்­பூர் வந்து செல்­வ­தில்­தான் எங்­க­ளுக்கு வரு­மா­னமே உள்­ளது. பொருட்­களை இங்­கி­ருந்து எடுத்து சென்று விற்­போம். அங்­கி­ருந்து பொருட்­களைக் கொண்டு வந்து இங்கு விற்­போம். இதெல்­லாம் ஒன்­றரை ஆண்­டு­க­ளாக இல்­லா­மல் நிரம்ப சிரமப்பட்டோம்.

"தனி­மை உத்­த­ர­வு எங்­க­ளுக்கு பலனளிக்­காது. அத­னால் இந்த விடி­எல் வந்­தால் வாய்ப்பை ஆராய்­வோம். எல்­லாம் டிக்­கெட் விலை­யைப் பொறுத்து இருக்­கிறது," என்று கூறி­னார் 25 ஆண்­டு­க­ளாக மாதம் இரு­முறை சிங்­கப்­பூர் வந்து செல்­லும் திரு நட­ரா­ஜன்.

சுற்­றுப்­ப­ய­ணத்­திற்கு இந்­தி­யர்­கள் விரும்­பும் இட­மாக சிங்­கப்­பூர் விளங்­கு­கிறது என்­றார் சென்­னை­யில் பயண முகவை நடத்­தி­வ­ரும் திரு முக­மது இக்­பால்.

"ஜோடி­யாக, குடும்­ப­மாக, நண்­பர்­க­ளாக, சக ஊழி­யர்­க­ளாக, பெரிய குழுக்­க­ளாக என பல­த­ரப்­பட்ட அள­வில் சிங்­கப்­பூ­ருக்­கான சுற்­றுப்

­ப­யண ஏற்­பா­டு­களை பல ஆண்­டு­ க­ளாகச் செய்­து­வ­ரு­கி­றேன்.

"சிங்­கப்­பூர் என்­றாலே இங்­குள்­ள­வர்­கள் அதி­கம் விரும்­புவது விடு­

மு­றைக்காலப் பயணம்தான். ஆண்­டின் எந்த நேரத்­தி­லும் அதற்­கான தேவை இருந்­தது. கொரோனா எல்­லா­வற்­றை­யும் நிறுத்­தி­யது.

"இந்­தப் புதிய ஏற்­பாடு நடை முறைக்கு வரும் நாளை எதிர் பார்த்துப் பலரும் காத்துக் கிடக் கின்றனர்," என்­றார் அவர்.

தற்­போது இந்­தி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வரு­வோர் ஏழு நாட்­கள் இல்­லத் தனிமை உத்­த­ரவை நிறை­வேற்­ற­வேண்­டும் என்ற நிலை. அத­னால் இந்­தி­யர்­கள், வாய்ப்­பு இ­ருக்­கும் வேறு நாடு­க­ளுக்­குச் சுற்­றுலா சென்­று­வ­ரு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் மின்­னி­யல் சாத­னங்­கள், விலை­யு­யர்ந்த கைக்­க­டி­கா­ரங்­கள் போன்றவற்றை வாங்­கு­ வ­தற்­கும் ஓய்வுப்பயண விடு­

மு­றைக்­கா­க­வும் வரு­வது திரு­வாட்டி அனி­தா­விற்­குப் பிடித்­த­மான ஒன்று. மீண்­டும் அது சாத்­தி­ய­மா­வது குறித்து மகிழ்ச்சி தெரி­வித்­தார் பெங்­க­ளூ­ரில் வசிக்­கும் அவர். சென்னை வழியாக சிங்­கப்­பூர் வர முயற்சி செய்­யப்போவ­தாக அவர் கூறி­னார்.

'விடி­எல்' திட்­டத்தில் சேர்க்கப் பட்டுள்ள விமா­னச் சேவை­கள் விரை­வில் இன்­னும் அதி­க­ரிக்­கப் பட­வேண்­டும் என பலர் விருப்­பம் தெரி­வித்­த­னர்.

"அதோடு ஏரா­ள­மான வெளி­நாட்டு ஊழி­யர்­கள் இரு­வழிகளி­லும் பய­ணம் மேற்­கொள்ளக் காத்­தி­ருக்­கும் நிலை­யில், தமிழ்­நாட்­டிற்கு இன்­னும் அதிக விமா­னச் சேவை­கள், குறிப்­பாக திருச்­சி­யி­லி­ருந்து 'விடி­எல்' சேவை­களை வழங்­க­வேண்­டும் என்­றும் பலர் கேட்­டுக்­கொண்­ட­னர்.

"பெரும்­பா­லான ஊழி­யர்­கள் திருச்­சி­யைச் சுற்­றி­யுள்ள மன்­னார்­குடி, தஞ்­சா­வூர், பட்­டுக்­கோட்டை, புதுக்­கோட்டை போன்ற நக­ரங்­

க­ளி­லி­ருந்து வரு­கின்­ற­னர்.

"அத­னால் திருச்சி செல்­வ­தற்­கும் அங்­கி­ருந்து வரு­வ­தற்­கும் தேவை அதி­க­மாக இருப்­பது வழக்­க­மான ஒன்று," என்­றார் பத்­தாண்­டு­க­ளாக சிங்­கப்­பூ­ரில் 'தஞ்சை டிரா­வல் அண்ட் டூர்ஸ்' நிறு­வ­னத்தை நடத்தி வரும் திரு அப்­துல் காதர், 41.

"டிசம்­ப­ரில் திருச்­சிக்­குச் செல்­லும் வந்தே பாரத் சேவைக்­கான பதிவு ஒரே இர­வில் வியா­ழனன்று விற்­றுத் தீர்ந்­தது," என்­றார் அவர். சனிக்­கி­ழமை (நேற்று) நில­வ­ரப்­படி டிசம்­பர் மாதம் 28ஆம் தேதி­வரை இந்­தி­யா­விற்கு நேர­டி­யா­கச் செல்­

வ­தற்­கான விமா­னச் சீட்­டு­கள் அனைத்­தும் தீர்ந்­து­விட்­டன.

ஒரு­வழி விமா­னச் சேவைக்­கான கட்­ட­ணம் $393 என்று ஏர் இந்­தியா எக்ஸ்­பி­ரஸ் இணை­யத்தளத்­தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

கடந்த வாரம் ஏர் இந்­தியா விமா­னம், சென்னை, புது­டெல்லி, பெங்­க­ளூரு, மும்பை ஆகிய நக­ரங்­க­ளுக்­கான மீட்­புச் சேவை பய­ணச்­சீட்­டு­ களை விற்­ப­னைக்­குத் திறந்­த­தும் விரை­வாக விற்­றுத் தீர்ந்­தன என்­றும் முக­வர்­கள் கூறி­னர்.

ஒரு­வ­ழிப் பய­ணச்சீட்டின் விலை $495 என நிர்­ண­யிக்­கப்­பட்டிருந்­த­ தை­யும் அவர்கள் பகிர்ந்­த­னர். ஜன­வரி மாதம் வரை­ அனைத்து பய­ணச்­சீட்­டு­களும் விற்­றுத் தீர்ந்த நிலை­யில் இனி 'விடி­எல்' சிறப்பு விமா­னச் சேவை­களோ இதர புதிய ஏற்­பா­டு­களோதான் ஒரே வழி.

கடந்த ஆண்டு முற்பாதியில் இருந்தே கொவிட்-19 கிருமித்தொற்று உலகம் முழுதும் தலைவிரித்தாடியதால் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகப் பயணச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதன் விளைவாக இருநாட்டிற்கும் அதன் மக்களுக்கும் இடையிலான தொடர்புகளில் நீண்ட இடைவெளி விழுந்தது. அண்மையில், தடுப்பூசி போட்டோருக்கான பயணத் திட்டத்தில் இந்தியாவையும் சிங்கப்பூர் இணைத்ததன் மூலம் இயல்புநிலை திரும்பும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் பலர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!