திருமண அழைப்பிதழ்களுடன் நீங்கா பந்தம்

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

அஞ்­சல்­த­லையை ஒட்டி, திரு­மண அழைப்­பி­தழை அனுப்­பு­வ­தற்­குப் பதி­லாக மின்­னஞ்­சல் அல்­லது 'வாட்ஸ்­அப்' செயலி வழி திரு­மண அழைப்­பி­தழை அனுப்­பும் போக்கு அண்­மைய ஆண்­டு­களில் அதி­கரித்து வரு­கிறது.

திரு­ம­ணம் முடிந்த பிறகு திரு­மண அழைப்­பி­தழை அப்­பு­றப்­படுத்­து­வோர் மத்­தி­யில், அதைப் பத்திரப்­ப­டுத்­திச் சேக­ரித்­தும் வரு­கி­றார் சன்­லவ் இல்­லத்­தின் தலை­மைத் திட்ட அதி­கா­ரி­யான திரு க.ராஜ­மோ­கன். கடந்த 16 ஆண்டு­க­ளாக துணைத் திரு­மணப் பதி­வா­ள­ராக சேவை­யாற்றி வரும் திரு ராஜ­மோ­கன், ஒரு திரு­மண அழைப்­பி­தழை உரு­வாக்­கு­வ­தில் இரு குடும்­பத்­தி­ன­ரின் பங்கு ஏரா­ளம் அடங்­கி­யுள்­ளது என்று வலி­யு­றுத்­தி­னார்.

திரு­மண அழைப்­பி­த­ழின் தனித்­து­வ­மான வடி­வ­மைப்பு, அதில் தம்­ப­தி­யி­ன­ருக்­காக சேர்க்­கப்­படும் பொன்­மொ­ழி­கள் போன்­ற­வற்­றுக்கு போதிய முக்­கி­யத்­து­வம் கொடுக்­கப்­ப­ட­வில்லை என்ற எண்­ணமே நாளடை­வில் அவற்றை சேக­ரிக்­கத் தம்­மைத் தூண்­டி­ய­தாக திரு ராஜ­மோ­கன் தெரி­வித்­தார்.

தம்­மு­டைய உற­வி­னர், நண்­பர்­கள் மற்­றும் தாம் பதிவு செய்ய உத­வும் திரு­ம­ணத் தம்­ப­தி­களிடமிருந்து தொடங்கி, இது­வரை­யில் 400க்கும் மேற்­பட்ட திரு­மண அழைப்­பி­தழ்­கள் தம்­மி­டம் குவிந்­துள்­ளன.

தம் அலு­வ­லக மேசை­யில் சில திரு­மண அழைப்­பி­தழ்­களைக் காட்­சிக்கு வைத்­தி­ருப்­பது, சக ஊழி­யர்­க­ளி­ட­மி­ருந்­தும் நல்ல வர­வேற்­பைப் பெற்­றுத் தந்­துள்­ளது. அமைப்­பில் தொண்­டூ­ழி­யம் புரிய வரும் இளை­யர்­களை­யும் இவ­ரின் வித்­தி­யா­ச­மான பொழு­து­போக்கு கவர்ந்­துள்­ளது.

ஒவ்­வொ­ரு­மு­றை­யும் இந்த திரு­மண அழைப்­பி­தழ்­க­ளைப் பார்க்­கும்­போது, அதனை அனுப்­பிய தம்­ப­தி­யி­ன­ரின் திரு­மண நினை­வலை­கள் அவர் மன­தில் வந்­து­போ­கும். சில ஆண்­டு­கள் கழித்து அதே தம்­ப­தி­க­ளுக்­குத் திரு­மண நாள் வாழ்த்து தெரி­விக்­கும்­போது, அத்­து­டன் தம்­ப­தி­யின் திரு­மண அழைப்­பி­த­ழைக் காட்­டும் புகைப்­படத்­தை­யும் அவர் கைபே­சி­யில் அனுப்­பி­வைப்­பா­ராம்.

"அவர்­க­ளின் திரு­மண அழைப்­பி­தழை இன்­ன­மும் நான் வைத்­தி­ருக்­கி­றேன் என்ற இன்ப அதிர்ச்சி­யில் அவர்­கள் இருப்­பார்­கள். திரு­மண ஏற்­பா­டு­க­ளுக்கு வச­தி­யாக தற்­போது மின்­னி­லக்க அழைப்­பி­தழ்­கள் பிர­பலாகி வர, இது­போன்ற திரு­மண அழைப்­பிதழ்­கள் எதிர்­கா­லத்­தில் அரி­தாகி­வி­டும்," என்று கூறி­னார் 61 வயது திரு ராஜ­மோ­கன்.

ஓர் ஆண்­டில் சுமார் 40 திரு­மணங்­கள் வரை திரு ராஜ­மோகன் பதிவு செய்­கி­றார்.

"திரு­ம­ணத்­தில் மூன்று அம்­சங்­கள் முக்­கி­ய­மா­னவை. ஒரு­வரை ஒரு­வர் மதித்து நடப்­பது, ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் வெளிப்­ப­டை­யா­கப் பேசு­வது, ஆண­வத்­தைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருப்­பது ஆகி­ய­வையே அவை. இந்த வரி­களை நான் திரு­மண அழைப்­பி­தழ் ஒன்­றில் படித்­தேன், ரசித்­தேன்," என்று குறிப்­பிட்­டார் திரு ராஜ­மோ­கன்.

துணைத் திரு­ம­ணப் பதி­வா­ள­ராக பல்­லாண்டு காலம் சேவை­யாற்றி வரும் திரு ராஜ­மோ­க­னுக்கு இவ்­வாண்டு தொடக்­கத்­தில் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின் 'கம்­யூ­னிட்டி கேர்ஸ்' விருது வழங்­கப்­பட்­டது.

இவ்­வி­ருது சமூக மாற்­றத்­திற்கு வழி­வ­குத்து தொண்டு புரி­யும் நபர்­க­ளை­யும் அமைப்­பு­களை­யும் அங்­கீ­க­ரிக்­கிறது.

தாம் சேக­ரித்துள்ள திரு­மண அழைப்­பி­தழ்­களைக் கண்­காட்சி ஒன்­றில் வைப்­பதே திரு ராஜ­மோ­க­னின் விருப்­ப­மா­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!