தமிழ்ப் பேரினத்தின் பேரின்பத் திருநாள்

கி.ஜனார்த்தனன்

பொங்­கல் திரு­நாள் வெறும் பண்­டிகை மட்­டு­மல்ல, அது தமி­ழி­னத்­தின் பேர­டை­யா­ளம்! உல­கிற்கு அமுது படைத்­தி­டும் உழ­வர்­க­ளின் ஓயாத உழைப்பை உணர்த்­தும் அறு­வ­டைத் திரு­நாள்! நாளும் ஒளிதந்து மனி­த­கு­லத்­தின் வாழ்­வில் ஒளி­யேற்றி வைக்­கும் கதி­ர­வனுக்­கும் கால்­ந­டைச் செல்­வங்­களுக்­கும் நன்றிநவி­லும் நன்­னாள்!

உல­கெங்­கி­லும் உள்ள தமிழ் மக்­கள் ஆண்டு­தோ­றும் பொங்­கல் திரு­நாளை வெகு­சி­றப்­பா­கக் கொண்­டாடி வரு­கின்­ற­னர்.

அவ்­வ­கை­யில், சிங்­கப்­பூ­ரி­லும் 'தமி­ழர் திரு­நாளை' பெரு­ம­கிழ்ச்சி­யோடு வர­வேற்று, பேரின்­பம் கண்ட சில குடும்­பங்­க­ளைத் தமிழ் முரசு சந்­தித்­தது.

சமயம் கடந்த சங்கமம்

பொங்கல் திருநாளை முக்கியப் பண்டிகையாகக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறினார் அடித்தளத் தலைவரும் கல்வியாளருமான திரு நசீர் கனி, 63.

"இந்து சமயத்தவரான எங்கள் வீட்டுப் பணிப்பெண்கள் பொங்­க­ல் வைத்து, எங்­க­ளுக்­குப் பரி­மா­று­வர்," என்­றார் வெஸ்ட் கோஸ்ட் சமூக மன்­ற இந்­திய நற்­பணிச் செயற்­குழுத் தலை­வரு­மான திரு கனி.

பல இன, சம­யத்­தி­னர் வாழும் சிங்­கப்­பூ­ரில் எல்­லாக் கொண்­டாட்­டங்­க­ளி­லும் பங்­கு­கொள்­ளும் வாய்ப்பு­கள் ஏரா­ள­மாக இருப்­ப­தாக அவ­ரின் துணை­வி­யார் திரு­வாட்டி மும்­தாஜ் பீவி, 57, குறிப்­பிட்­டார்.

தமது குடும்­பத்­தி­லும் பொங்­கல் திரு­நாளைக் கொண்­டா­டும் வழக்­கம் இருந்­த­தா­கக் கூறிய அவர், தங்­கள் வீட்­டி­லும் தம் தாயார் சர்க்­கரைப் பொங்­க­லும் வெண்­பொங்­கலும் செய்­வார் என்று சொன்­னார்.

அலெக்­சாண்­டிரா எஸ்­டேட் வட்­டா­ரத்­தில் வளர்ந்த திரு நசீர், பொங்­கல் திரு­நா­ளின்­போது வெகு­சி­றப்­பாக கேளிக்கை மற்­றும் விளை­யாட்டு நிகழ்ச்­சி­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டதை நினை­வு­கூர்ந்­தார்.

நண்­பர்­க­ளு­டன் பொங்­கல் திரு­நா­ளைக் கொண்­டா­டு­வ­தைப் பெரி­தும் விரும்­பு­கி­றார் இத்­தம்­ப­தி­ய­ரின் மக­னும் ஆசி­ரி­ய­ரு­மான அமீர் ரோஷன், 29.

ஈராண்­டு­க­ளுக்­கு­முன் தங்­க­ளது வீட்­டி­லேயே வளர்ந்த செங்­க­ரும்பை நண்­பர் மணி­கண்­ட­னு­டன் சேர்ந்து சுவைத்த இனிய தரு­ணத்தை நினை­வு­கூர்ந்­தார் திரு அமீர்.

இதன்­மூ­லம் உழ­வர்­க­ளின் சிர­மத்­தை­யும் தம்­மால் உணர முடிந்­த­தாக அவர் சொன்னார்.

இவர்களின் வீட்டில் இப்போது பணிப்­பெண்­ணாக இருக்கும் திரு­வாட்டி சுமதி, உற்­சா­க­மும் விறு­விறுப்­பும் நிறைந்த தமி­ழ­கப் பொங்­கல் கொண்­டாட்­டங்­களை சிங்­கப்­பூ­ரி­லும் தொடர முடிந்­ததை நினைத்து மகிழ்­வ­தா­கக் கூறி­னார்.

உறவுகளுக்கான பொன்னாள்

பொங்­கல் திரு­நா­ளின் இறுதி நாளான காணும் பொங்­க­ல், உற­வு­கள் கூடி, அள­வ­ளாவி, பிணைப்பை வலுப்படுத்தும் பொன்னாள்.

அதற்­கேற்ப, ரவிக்­கு­மார் ஜம்­பு­நா­தன் - விசா­லாக்‌ஷி நாக­நா­தன் இணை­யர் வீட்­டி­லும் இம்­முறை பொங்­கல் திரு­நாள் களை­கட்­டி­யுள்­ளது. திரு­வாட்டி விசா­லாக்‌ஷியின் சகோ­த­ரர் திரு வர­த­ரா­ஜ­னும் அவ­ரின் மனைவி திரு­வாட்டி அனு­ஷா­வும் இம்­முறை அவர்­க­ளு­டன் இணைந்து பொங்­கல் திரு­நா­ளைக் கொண்­டா­டு­வதே அதற்­குக் கார­ணம்.

சூரி­யனுக்கு வழி­பாடு இருந்­தா­லும் சம­யம் சார்ந்­த­தாக இல்­லா­மல் அனைத்து சமூ­கத்­தி­ன­ரை­யும் ஒன்­றி­ணைப்பதாகத் திகழ்வதே தமிழர் திருநாளின் சிறப்பு என்றார் வங்கி நிர்வாகியாகப் பணியாற்றும் திரு ரவிக்குமார்.

"ஒற்­று­மை­யைப் பறை­சாற்­றும் 'காக்­காப்­பிடி கண்­ணுப்­பிடி' எனப்­படும் கலந்த சாதத்தை வழங்­கு­வதும் என் குடும்ப வழக்­க­மாக உள்­ளது," என்று திருச்­சி­ராப்­பள்ளி­யைப் பூர்­வீக­மா­கக் கொண்ட திரு­வாட்டி விசா­லாக்‌ஷி கூறி­னார்.

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லால் ஒன்­று­கூ­டல்­கள் வீட்­டில் எளி­மை­யாக நடப்பது மகிழ்ச்­சி அளிப்­ப­தா­கக் கூறி­னார் அவரின் தாயார் திரு­வாட்டி கல்யாணி நாக­நா­தன், 72.

செல்லப் பிராணிகளுடன்...

கடந்த 16 ஆண்­டு­க­ளாக பொங்­கல் திரு­நா­ளன்று விடுப்பு எடுத்­து­வி­டு­கி­றார் வங்­கி­யா­ள­ரான திரு மதி­வண்­ணன், 39. பள்­ளி­யில் நிர்­வாக உத­வி­யா­ளராகப் பணிபுரியும் தம் மனைவி அனுபிரியாவுடனும் பிள்ளைகளைப்போல் வளர்த்துவரும் செல்ல நாய்க்குட்டிகள் ஃபிலஃப், ஜிம்முடனும் பொங்கல் திருநாளை இவர் கொண்டாடி வருகிறார்.

வீட்­டில் தாங்­கள் இரு­வர் மட்­டுமே இருந்­தா­லும் எளி­மை­யாக இல்­லா­மல் வித­வி­த­மா­கச் சமைப்­பதில் மன­நி­றைவு அடை­வ­தா­கக் கூறி­னார் திரு­வாட்டி அனு­பி­ரியா.

"கிரு­மிப் பர­வ­லால் மற்­ற­வர்­களை வீட்­டிற்கு அழைக்க முடி­ய­வில்லை. இருப்பினும், உணவு சமைத்து, அவற்­றைத் தாய்-தந்­தை­யர், உற­வி­னர், அண்டை வீடு­களில் வசிக்­கும் சீன, மலாய் குடும்­பங்­களுக்கு வழங்கி மகிழ்­வோம்," என்­றார் அவர். பொங்கலன்று தங்கள் பெற்றோர்களைக் கண்டு, இவர்கள் ஆசிபெற்று வந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!