கண்ணபிரான், வரதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வாழும் மொழியாகத் தமிழ் மொழி நிலைத்து வளர பங்களிக்கும் மூத்த தலைமுறையினருக்கும் இளையருக்கும் ‘தமிழ்ச்சுடர்’ விருதுகள்

ஆ. விஷ்ணு வர்­தினி

 

சிங்­கப்­பூ­ரின் முன்­னோடி எழுத்­தா­ளர்­களில் ஒரு­வ­ரான இராம. கண்­ண­பி­ரான், மூத்த நாட­கக் கலை­ஞர் ச. வர­தன் இரு­வ­ரும் இவ்­வாண்­டின் தமிழ்ச்­சு­டர் வாழ்நாள் சாத­னை­யா­ளர்­க­ளாக கௌர­விக்­கப்­பட்­டுள்­ள­னர்.

சிங்­கப்­பூ­ரில் வாழும் மொழி­யாக தமிழ்­ மொழி நிலைத்து வளர பங்காற்றி வரும் முன்­னோ­டி­க­ளை­யும் இளை­யர்­க­ளை­யும் தமிழ்ச்­சு­டர் விருது நிகழ்வு அங்­கீ­க­ரிக்­கிறது.

மீடி­யா­கார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவ­கா­ர­ப் பிரி­வும் தமிழ் மொழி கற்­றல், வளர்ச்­சிக் குழு­வும் இணைந்து நேற்று முன்தினம் நடத்திய இந்­நி­கழ்ச்­சி­யில், கல்வி, கலைத் துறை­களில் பங்­காற்­றி­ய­வர்­கள், இளம், வாழ்­நாள் சாத­னை­யா­ளர்­கள், சிறப்பு விருது என ஐந்து பிரி­வு­களில் மொத்­தம் எட்டு விருது­கள் வழங்­கப்­பட்­டன.

நூற்­றுக்­கும் மேற்­பட்ட பரிந்­து­ரை­கள் இவ்­வாண்­டின் தமிழ்ச்­சு­டர் விரு­துக்கு வந்­தி­ருந்­த­தைக் குறிப்­பிட்ட, நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான கல்வி அமைச்­சின் தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு­வின் தலை­வர் திரு விக்­ரம் நாயர் தமிழ் மொழி நிலைத்­தி­ருக்­கப் பங்காற்­று­வோ­ரும் அவர்­க­ளின் பங்களிப்­பைக் கொண்­டா­டு­வோ­ரும் அதி­க­ரித்­தி­ருப்­பது மகிழ்ச்­சி­ய­ளிக்­கிறது என்­றார்.

தமிழ்­மொழி வாழும் மொழி­யாக நிலைத்­தி­ருக்­கும் என்­ப­தற்கு இது நல்­ல­தொரு அறி­குறி என்று செம்­ப­வாங் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான திரு விக்­ரம் குறிப்பிட்டார்.

"தமிழ் இலக்­கி­யத்­தில் சிங்­கப்­பூ­ரின் மண்­ம­ணம் வீச­வேண்­டும் என்­ப­தும் மனித நெறி­கள் மேலோங்­க­வேண்­டும் என்­ப­துமே எனது குறிக்­கோள்­க­ளாய் உள்­ளன.

"தமிழ்ச்­சு­டர் விருது நிகழ்­வில் பல இளை­யர்­கள் மேடை­யே­றி­யது என்­னைப் பூரிக்க வைக்­கின்­றது," என்­றார் வாழ்­நாள் சாத­னை­யா­ளர் விருது பெற்ற 79 வயது திரு இராம. கண்­ண­பி­ரான்.

150 கட்­டு­ரை­களும் 50 சிறு­கதை, நாவல்­க­ளை­யும் எழு­தி­யுள்ள திரு இராம. கண்­ண­பி­ரான், ஒன்­றரை நூற்­றாண்டு தொன்மை வாய்ந்த சிங்­கப்­பூ­ரின் இலக்­கிய வர­லாற்­றில் தடம் பதித்­த­வர்.

"விரு­து­க­ளுக்­கா­க­வன்றி, ஆத்­மார்த்­த­மான முறை­யில் தமி­ழ­ருக்­காக சேவை­யாற்­றி­யுள்­ளேன். நாளும் தமிழ், நாவில் தமிழ் என்ற தமி­ழர் தாரக மந்­தி­ரம் சிங்­கப்­பூ­ரில் முழங்­கு­வது குறித்­துப் பெரு­மி­த­ம­டை­கி­றேன்," என்­றார் வாழ்­நாள் சாத­னை­யா­ளர் விரு­து­பெற்ற மற்­றொ­ரு­வ­ரான ச. வர­தன்.

திரு ச. வர­தன், பகுத்­த­றிவு நாடக மன்­றத்­தைத் தொடங்­கி­ய­வர். சிங்­கப்­பூ­ரின் ஒலி, ஒளி ஊட­கங்­க­ளுக்­குப் பங்­காற்­றி­யுள்ள இவர் பல விரு­து­க­ளைப் பெற்­றி­ருக்­கின்­றார். 88 வய­தா­கும் திரு வர­தன், 'நீங்கா நினை­வு­கள்' என்ற இரு­மொழி நூலை எழுதி வரு­கி­றார்.

இளம் சாத­னை­யா­ளர் விருது பெற்ற 26 வயது அரு. சுப்பு அடைக்­க­ல­வன். நன்­யாங் தொழி­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் தமிழ் இலக்­கிய மன்ற தலை­வ­ரா­கப் ­பல தமிழ் நிகழ்­வு­களை வழி­ந­டத்தியவர்.

"எதிர்­கா­லத்­தில் தமி­ழர்­க­ளுக்­குத் தமிழ் சார்ந்த வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வ­தி­லும் பெற்­றுத் தரு­வ­தி­லும் பொறுப்பு வகிக்க விரும்­பு­கி­றேன். தமி­ழர்­க­ளின் திறன் மேம்­பாட்­டிற்­குத் துணை­பு­ரி­யும் நட­வ­டிக்­கை­கள் மிக முக்­கி­யம். கொவிட்-19 சூழ­லுக்­கேற்ப தமிழ் நிகழ்­வு­க­ளின் பாணி­யும் மாற­வேண்­டும்," என்­றார் அறி­வி­யல், தொழில்­நுட்ப, ஆய்வு அமைப்­பில் பொறி­யி­ய­லா­ள­ரா­கப் பணி­பு­ரி­யும் திரு சுப்பு.

கல்வி பிரி­வில் தமிழ் மொழி­வளர்ச்­சிக்கு முனைந்து பாடு­படும் ரிவர்­சைட் உயர்­நி­லைப் பள்­ளிக்கும் யூஹுவா உயர்­நி­லைப் பள்­ளிக்­கும் விரு­து­கள் வழங்­கப்­பட்­டன.

தமி­ழா­சி­ரி­யர்­கள் திரு ர. பால­சுப்பி­ர­ம­ணி­யம், திரு­மதி கி. கவிதா இரு­வ­ரும் சிறப்­பிக்­கப்­பட்­ட­னர்.

அகம் தியேட்­டர் லேப் அமைப்பும் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் தமிழ்ப் பேர­வை­யும் கலைப் பிரி­வில் விரு­து­கள் பெற்றன.

"தொடர்ந்து கலைத்­து­றைக்­குப் பணி­யாற்ற இவ்­வி­ருது ஊக்­க­மளிக்­கி்­றது. தொழில்­நுட்­பத்­தைப் பயன்­படுத்தி தமிழ் நாட­கங்­க­ளைப் பிர­பலப்­ப­டுத்த எண்­ணு­கி­றோம்," என்று கூறினார் 'அகம் தியேட்­டர்' நிறு­வனரும் இயக்குநருமான திரு சுப்ர­ம­ணி­யம் கணேஷ்.

அகம் தியேட்­டர், 'தியேட்­டர் லாப்' என்ற அதன் இளை­யர் மேம்பாட்டுத் திட்­டத்­தின் மூலம் 600க்கும் மேற்­பட்ட இளை­யர்­களுக்குப் பயிற்சி அளித்துள்ளது.

தமிழ்ச்­சு­டர் கலை விரு­தி­னைப் பெற்ற மற்­றோர் அமைப்­பான தேசி­யப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் தமிழ்ப் பேர­வை­யும் இயல், இசை, நாட­கம் மூலம் தமிழ்­மொ­ழியை இளை­யர்­களி­டத்­தில் வளர்த்து வரு­கின்­றது.

"கொவிட்-19 சூழ­லில் சவால்­களுக்­கி­டையே எல்­லோ­ரின் நம்பிக்­கை­யும் தமி­ழார்­வ­மும் தமிழ்ப் பேரவை­யின் நிலைத்­தன்­மைக்­குக் கைகொ­டுத்­துள்­ளது. இது தமிழ்ப் பேர­வை­யின் வர­லாற்­றில் இடம்­பெற்ற அனை­வ­ருடைய வெற்றி," என்­று கூறினார் பேர­வை­யின் தலை­வர் 23 வயது விஜ­ய­ராஜ் முத்­துக்­குமரன்.

தேசி­யப் பல்­க­லைக்­க­ழக சட்­டத்­துறை மாண­வ­ரான விஜ­ய­ராஜ், எதிர்­கா­லத்­தில் சமூ­கத் தலை­வ­ராகப் பணி­யாற்ற லட்­சி­யம் கொண்­டி­ருக்­கி­றார்.

புதிய பிரி­வாக இவ்­வாண்டு தமிழ்ச்­சு­டர் சிறப்­புப் பிரிவு அறி­முகப்­ப­டுத்­தப்­பட்­டது.

தமிழ்­மொழி விழாவை ஆண்டுதோறும் ஏற்­பாடு செய்து வரும் வளர்­த­மிழ் இயக்­கம் இந்தப் பிரி­வில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!