'புரோஜெக்ட் எம்பவர்': பல்கலைக்கழக மாணவர்களுக்கான நான்கு சிறப்பு நிகழ்ச்சிகள்

'புரோஜெக்ட் எம்பவர்': பல்கலைக்கழக மாணவர்களுக்கான நான்கு சிறப்பு நிகழ்ச்சிகள்

2 mins read
546be7b2-d9b5-4161-9a9c-0120a0ca6299
'ஸூம்' செயலிவழி நடந்த நிகழ்ச்சிகளில் உற்சாகத்துடன் பங்குபெற்ற மாணவர்கள்.படம்: புரோஜெக்ட் எம்பவர் -

சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளின் தமிழா அமைப்பு, 'புரோ­ஜெக்ட் எம்­ப­வர்' எனும் திட்­டத்­தின்­கீழ், கடந்த பிப்­ர­வரி 25ஆம் தேதி­யி­லி­ருந்து மார்ச் 5ஆம் தேதி­வரை பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­கான நான்கு நிகழ்ச்­சி­க­ளுக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­குத் தன்­னம்­பிக்­கையை ஊட்டி வருங்­கா­லத்­திற்­குத் தயா­ராக இருக்­கத் தேவை­யான திறன்­களை அவர்­க­ளுக்­குக் கற்­பிப்­பதே இந்­நி­கழ்ச்­சி­க­ளின் நோக்­க­மா­கும்.

நிதிக் கல்வி, தனி­ம­னித அடை­யா­ளத்தை மெரு­கூட்­டு­தல், 'கே-பாப்' நட­னம், கணினி குறி­யீட்டு முறை ஆகி­ய­வற்றை பங்­கேற்­பா­ளர்­க­ளுக்கு இந்­நி­கழ்ச்­சி­கள் கற்­றுக்­கொ­டுத்­தன. குறிப்­பாக, இத்­திட்­டம் பெண்­க­ளுக்கு வெளி­யு­ல­கத்­தில் தேவைப்­ப­டக்­கூ­டிய திறன்­களை கற்­றுக்­கொ­டுத்து அவர்­களை ஊக்­கு­வித்­தது.

'ஸூம்' செய­லி­வழி நடை­பெற்ற 'புரோஜெக்ட் எம்­ப­வர்' திட்­டத்­தின் நிகழ்ச்­சி­கள், 'கோ வித் தி ஃப்ளோ' மக­ளிர் அமைப்­பு­டன் சேர்ந்து நடத்­தப்­பட்­டது. மாத­வி­டாய்ப் பொருள்­களை வாங்க இய­லாத வறு­மை­நிலை, மாத­வி­டாய் தொடர்­பான நோய்­கள் ஆகிய பிரச்­சி­னை­க­ளைப் பற்­றிய விழிப்­பு­ணர்வை அதி­க­ரிக்க உழைக்­கும் அமைப்­பிற்­குக் கைகொ­டுப்­பது அதன் நோக்­கம்.

"நம் இந்­திய சமு­தா­யத்­தில் மாத­வி­டாய் பற்­றிப் பர­வ­லா­கப் பேசப்­ப­டா­த­தால் பல­ருக்­கும் இது­பற்­றிப் போதிய அறிவு இல்லை. இதை மாற்­றவே நாங்­கள் இந்­தத் திட்­டத்தை மேற்­கொண்­டோம்," என்­றார் 'எம்­ப­வர்' திட்­டத்தை வழி நடத்­திய அக் ஷயா நட­ரா­ஜன்.

நிகழ்ச்­சி­களில் கலந்­து­கொண்­ட­வர்­கள் தாங்­கள் விரும்­பிய தொகை­யைக் கட்­ட­ண­மா­கச் செலுத்­த­லாம் என்று கூறப்­பட்­டது. அந்­தத் தொகையை, 'கோ வித் தி ஃபுளோ' அமைப்­புக்கு நன்­கொ­டை­யாக வழங்­கி­யது 'எம்­ப­வர்' திட்­டம்.

இந்த நன்­கொடை எங்­க­ளுக்­குப் பெரும் உத­வி­யாக இருந்­தது. 'சானிட்­டரி நாப்­கின்­களை' பொட்­ட­லம் கட்­டு­வ­தற்­கும் அவற்றை குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­களை சேர்ந்த பெண்­க­ளி­டம் கொண்­டு­சேர்ப்­ப­தற்­கும் இத்­தொகை பயன்­பட்­டது," என்­றார் 'கோ வித் தி ஃபுளோ' அமைப்­பைச் சேர்ந்த சுந்­த­ரம் மோகன் ஷக்தி.