பன்முகத்தன்மை போற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டம்

கி. ஜனார்த்­த­னன்

இந்­தி­யப் புத்­தாண்­டுக் கொண்­டாட்­டத்தை முன்­னிட்டு இந்­திய மர­பு­டைமை நிலை­யம் நேற்­றும் இன்­றும் பொது­மக்­க­ளுக்­குத் திறந்­து­வி­டப்­பட்­டுள்­ளது.

'இந்­திய இசை, இசைக்­க­ரு­வி­கள்' என்ற கருப்­பொ­ரு­ளில் பல்­வேறு நிகழ்ச்­சி­க­ளுக்­கும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லால் கடந்த ஈராண்­டு­க­ளா­கப் பெரும்­பா­லும் மெய்­நி­கர் நிகழ்ச்­சி­களை நடத்தி வந்த நிலை­யம், இவ்­வாண்டு நேரடி நிகழ்ச்­சி­களை நடத்­து­கிறது.

நிலை­யத்­துக்­குச் செல்­வோர் வெவ்­வேறு இந்­திய சமூ­கங்­க­ளின் மாறு­பட்ட இசை­யைப் பற்­றிய தக­வல்­க­ளைத் தெரிந்­து­கொள்­வ­து­டன், இசை, நடன நிகழ்ச்­சி­க­ளை­யும் கண்டு ரசிக்­க­லாம்.

இன்று காலை 10 மணி முதல் பிற்­ப­கல் நான்கு மணி வரை நிகழ்ச்­சி­கள் நடை­பெ­றும். இவற்­றில் சில இல­வச நிகழ்ச்­சி­கள். பயி­ல­ரங்­கு­க­ளுக்­குக் கட்­ட­ணம் $10.00. 12 வய­துக்கு மேற்­பட்­டோ­ருக்கு தஞ்­சா­வூர் ஓவி­யப் பயி­ல­ரங்கை நடத்­து­கி­றார் 'நிகா ஆர்ஸ்ட்' அமைப்­பின் காயத்ரி சோமேஸ்­வ­ரன். தெய்­வத் திரு­வு­ரு­வங்­க­ளு­டன் இசைக்­க­ரு­வி­க­ளைச் சித்­தி­ரிக்­கும் படங்­கள் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன.

இசை­யு­டன் தொடர்­பு­டைய கதை சொல்­லும் அங்­கத்தை 'டமாரு' அமைப்­பு­டன் இணைந்து வழங்­கு­கி­றார் 'டிங்க்­த­மிழ்' அகா­ட­மி­யின் யோகேஸ்­வரி பிர­ஷாந்த்.

பர­த­நாட்­டி­யம், கதக், ஒடிசி, குச்­சுப்­புடி, மோகி­னி­யாட்­டம் ஆகிய நட­னங்­க­ளைக் கொண்ட சிறப்­புக் காணொளி, நிலை­யத்­தின் ஃபேஸ்­புக் பக்­கத்­தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. ஒரே இசைக்கு வெவ்­வேறு பாணி நட­னங்­கள் இடம்­பெற்­றி­ருப்­பது, இந்­தி­யக் கலா­சா­ரத்­தின் பன்­மு­கத்­தன்­மை­யில் உள்ள ஒற்­று­மை­யைக் காட்­டு­வ­தா­கக் கூறி­னார் 'சிங்­கப்­பூர் இண்­டி­யன் ஆர்க்­கெஸ்ட்ரா அன் குவையர்' எனும் இந்­திய இசைக்­குழுவின் இயக்­கு­நர் லலிதா வைத்­தி­ய­நா­தன்.

சிங்­கப்­பூ­ரில் பல்­வேறு இந்­திய சமூ­கத்­தி­னர் வசிப்­ப­தால் இத்­த­கைய ஒருங்­கி­ணைப்பு பொருத்­த­மாக இருப்­ப­தாக நிலை­யத்­தின் தலை­வர் பவானி தாஸ் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!