பாலர் பள்ளி தமிழாசிரியர்களுக்கான கருத்தாய்வரங்கம்

பாலர் பள்ளி தமி­ழா­சி­ரி­யர்­க­ளின் திறன்­களை மெரு­கூட்­ட­வும் அவர்­களது தன்­னம்­பிக்­கையை அதி­க­ரிக்­க­வும் உம­றுப்­பு­ல­வர் தமிழ்­மொழி நிலை­யத்­தில் தமிழ்­மொழி கற்­றல், வளர்ச்­சிக் குழு­வின் ஏற்­பாட்­டில் நேற்று கருத்­தாய்­வ­ரங்­கம் ஒன்று நடை­பெற்­றது.

பொங்­கோல் கிரீன் வட்­டா­ரத்தில் அமைந்­துள்ள கல்வி அமைச்­சின் பாலர் பள்­ளி­யைச் சேர்ந்த மாண­வர்­கள், தங்­கள் மழலைக் குரல்­களில் தோட்­டத்­தைப் பற்­றிய பாடல் ஒன்­றை இனிமையாகப் பாடி நிகழ்ச்சியை அழகாகத் தொடங்கி வைத்­த­னர்.

நிகழ்ச்­சிக்­குச் சிறப்பு விருந்­தி­ன­ராக வருகை தந்த மாடர்ன் மாண்­டி­சோரி குழு­மத்­தின் தலை­வர் டி.சந்துரு, “நல்ல ஆசி­ரி­யர்­கள் இல்­லை­யேல் நல்ல மாண­வர்­கள் இல்லை. ஆகை­யால், இத்­த­கைய நிகழ்ச்­சி­க­ளின்வழி அவர்­க­ளது திறன்­களை வளர்ப்­பது முக்­கி­ய­மாகிறது,” என்று கூறி­னார்.

அவ­ரது சிறப்­பு­ரையை அடுத்து கருத்தாய்­வ­ர­ங்கத்­தின் இணை­யப்­பக்­கம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. அந்த இணை­யப் பக்­கத்­தில் பாலர் பள்ளி ஆசி­ரி­யர்­கள் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய பற்­பல கற்­பித்­தல் உத்­தி­களைப் பற்­றிய பட்­ட­றை­கள் காணொ­ளி­க­ளா­கப் பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளன.

நிகழ்ச்­சி­யின் சிறப்­புப் பேச்­சா­ள­ரான முனை­வர் க.காவேரி, அர்த்­த­முள்ள விளை­யாட்டு, தர­மான இரு­வழி கருத்­துப் பரி­மாற்­றம், பாலர் பள்­ளி­யில் மாண­வர்­க­ளுக்­குக் கற்­பிக்­கப்­படும் வெவ்­வேறு கூறு­கள், அர­சாங்­கம் பாலர் பள்­ளி­க­ளுக்கு வழங்கி வரும் உத­வி­கள் ஆகிய கருப்­பொ­ருள்­களை ஒட்டி உரை­ ஆற்­றி­னார்.

யூஹுவா வட்­டா­ரத்­தில் உள்ள பிசி­எஃப் ஸ்பார்க்­கல்­டாட்ஸ் பாலர் பள்­ளி­யைச் சேர்ந்த மாண­வர்­கள், கண்ணுக்­குக் குளிர்ச்­சி­யான ஒயி­லாட்­டத்­து­டன் நிகழ்ச்­சியை நிறைவுசெய்­த­னர்.

தமிழ்­மொழி கற்­றல், வளர்ச்சி கு­ழு­வின் செயலகத் தலை­வர் திருவாட்டி மும்தாஸ், இன்­றைய கால­கட்­டத்­தில் இல்­லங்­களில் மாண­வர்­கள் தமிழ் பேசு­வது குறைந்து வரு­வ­தால், மாண­வர்­களுக்கு தமிழ் மொழி­யின்­மீது ஆர்வத்தை ஏற்­ப­டுத்­து­வது பாலர் பள்ளி ஆசி­ரி­யர்­க­ளுக்குக் கடி­ன­மா­கி­யுள்­ள­தா­கச் சொன்­னார்.

என­வே­தான், இத்­த­கைய நிகழ்ச்­சி­கள் அவர்­க­ளுக்கு உதவிக்­க­ரம் நீட்ட முனை­வ­தாக திருவாட்டி மும்தாஸ் கூறி­னார்.

இக்­க­ரு­த்தாய்­வ­ரங்­கத்தில் பங்கேற்ற பாலர் பள்ளி ஆசி­ரி­யரான திருவாட்டி பொற்­செல்வி மாரப்பன், இது­போன்ற நிகழ்ச்­சி­களின்வழி தமிழ்மொழியை எவ்வாறு மாண­வர்­கள் விரும்­பும் வகை­யில் அவர்­க­ளி­டம் கொண்டு­சேர்க்க இய­லும் என்று தாம் கற்றுக்­கொண்­ட­தா­கச் சொன்­னார்.

இந்­நி­கழ்ச்­சி­யில் பாலர் பள்ளி மாண­வர்­க­ளின் கற்­ற­லைச் சுவா­ர­சி­ய­மாக்­கும் வகை­யில் இரு கதைகள் வெளி­யி­டப்­பட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!