கீதாரிகளின் வாழ்க்கை வடித்திருக்கும் கவிதைகள்

மதிய உணவு இடை­வே­ளை­களில் சக ஊழி­யர்­கள் ஓய்­வெ­டுக்­கும் போது ஆறு­கள் ஓடு­வ­தை­யும் குரு­வி­கள் பறப்­ப­தை­யும் ரசித்­துக்­கொண்டே கவி­தை­களை எழு­து­வார் 30 வயது வெற்றிச்செல்வன் இரா­சேந்­தி­ரன்.

இப்­படி இவர் எழு­திய 58 கவி­தை­கள், 'கீதா­ரி­யின் உப்­புக்­கண்­டம்' என்ற தொகுப்­பாக வெளி­வந்­துள்­ளது. கடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று தேசிய நூலக வாரி­யத்­தின் 'தி போட்' அரங்­கில் கவி­மாலை­யின் மாதாந்­திர சந்­திப்­பின்­போது வெளி­யி­டப்­பட்ட இந்­நூல் இவ­ரது முதல் கவி­தைத் தொகுப்பு.

ஒன்­பது ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூர் கட்­டு­மா­னத் துறை­யில் பொறி­யா­ள­ராகப் பணி­பு­ரி­யும் கவி­ஞர் வெற்­றிச்­செல்­வன், ஆடு மேய்ப்­பதை வாழ்க்­கை­யா­கக்­கொண்ட சமூ­கத்­தின் பாடு­க­ளை­யும் மகிழ்ச்­சி­க­ளை­யும் பிரி­வு­க­ளை­யும் ஆறு­தல்­க­ளை­யும் பாசாங்­கில்­லாத செறி­வான மொழி­யில் இத்­தொ­குப்­பில் 58 கவிதை­க­ளா­கத் தந்­துள்­ளார்.

விற்­றுப்­போன குட்­டியை இழந்த ஆடு­க­ளின் தவிப்பு, குட்டி ஈன்ற ஆடு­க­ளின் நஞ்­சுக் கொடி­க­ளுக்­காக அலை­யும் கிடை­காக்­கும் நாயின் தவிப்பு, பசித்­தும் உண்ண மன­மில்­லாத ஆடு மேய்க்­கும் கீதா­ரி­க­ளின் தவிப்பு என்று மொத்த சூழ­லை­யும் அடக்­க­மான சிறு­சிறு சொற்­களில் தீவி­ரம் குன்­றா­மல் கொண­ரும் வன்மை இந்தக் கவி­ஞ­ருக்கு இருக்­கிறது.

தன்­னைக் காட்­டி­லும் உய­ர­மான கம்­பு­டன், ஒற்­றைக்­கா­லில் நின்று, ஆடு­மேய்க்­கும் கீதா­ரி­களை இக்­கவி­தை­களில் முத­லில் கோட்­டுச் சித்­திர உரு­வ­மா­கத் தீட்டி, பிறகு அவர்­க­ளின் குணங்­க­ளு­டன் முப்­பரி­மா­ணத்­தில் திரட்டி, ஒரு­கட்­டத்­தில் பால் வீச்­ச­மும் வியர்வை நாற்­ற­மும் மாறாத வீச்­சு­டன் உயிர்ப்­பு­டன் வாச­கர்­முன் நிறுத்­தி­வி­டு­கி­றார்.

"கீதாரி என்­ப­வன் தலைமை தாங்­கு­ப­வன். சிறு­சிறு குழு­வாக ஆடு­க­ளை­யும் மாடு­க­ளை­யும் ஓட்டிக்­கொண்டு மேய்ச்­ச­லுக்­காக செல்­ப­வர்­களை வழி­ந­டத்­து­ப­வன். ஆனால் நிகழ்­கா­லத்­தில் கிடை­போடும் யாவ­ரும் கீதா­ரி­கள்­தான். ஏனென்­றால் குழுக்­க­ளாக இருந்­த­வர்­கள் நாக­ரிக மாற்­றம் மற்­றும் அதீத தொழில்­நுட்­பத்­தால் தனி­நபர்­க­ளாக மாற்­றப்­பட்­டு­விட்­ட­னர்," என்­றார் வெற்­றிச்­செல்­வன்.

"உல­க­மெங்­கும் ஒரே தொழில் புரி­யக்­கூ­டிய மக்­கள் உள்­ள­னர். ஆனால் அவர்­கள் யாவ­ரும் ஓர் இனக்­குழு கிடை­யாது. இந்த இடை­யர் இன மக்­கள் தமிழ் நிலத்­தின் மக்­கள். தொன்­மை­யான தொழில் புரி­யும் இவர்­க­ளுக்­கென்று எழு­திய முதல் கவி­தைத் தொகுப்­பாக இது­தான் இருக்­கும்," என்று கரு­தும் வெற்­றிச்­செல்­வன், கீதா­ரி­களின் வாழ்­வி­யலை ஒரு நாவ­லாக எழுதி வரு­கி­றார். 2020ஆம் ஆண்டு கொவிட்-19 பெருந்­தொற்­றின்­போது வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கென்று நடத்­தப்­பட்ட கவி­தைப் போட்­டி­யில் 'தேக்­கா­வில் பொம்மை வாங்­கு­பவன்' என்ற தலைப்­பில் இவர் எழு­திய கவிதை முதல் பரிசை வென்றது.

தமிழ்­மொழி மாதத்­தின் ஓர் அங்­க­மாக நடை­பெற்ற 'சிங்­போ­ரிமோ' தமிழ் கவிதை எழு­தும் போட்­டி­யில் கடந்த ஆண்டு, இறுதிச் சுற்­றில் தேர்­வான ஆறு போட்­டி­யா­ளர்­களில் இவ­ரும் ஒரு­வர். 16 வய­தில் கவிதை எழு­தத் தொடங்­கிய வெற்­றிச்­செல்­வன் சிங்­கப்­பூர் தமிழ் சார்ந்த நட­வ­டிக்­கை­களில் தொடர்ந்து ஈடு­பட்டு வரு­கி­றார்.

இவரின் இந்நூலை அப்­பர் டிக்­சன் சாலை­யில் உள்ள ஆர்யா கிரி­யே­ஷன்ஸ் என்ற கடை­யில் பெறலாம்.

செய்தி: பொன்­மணி உத­ய­கு­மார், சிவா­னந்­தம் நீல­கண்­டம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!