பழந்தமிழ் இலக்கியத்தைப் பறைசாற்றிய ‘சதிராட்டம்’

வளர்­த­மிழ் இயக்­கத்­தின் ஆத­ர­வில் மகூ­லம் கலைக்­கூ­டம் வழங்­கிய 'சதி­ராட்­டம்' நிகழ்ச்சி இவ்­வாண்­டின் தமிழ் இளை­யர் விழா­வின் ஓர் அங்­க­மாக இம்­மா­தம் 7ஆம் தேதி அரங்­கே­றி­யது.

சிங்­கப்­பூர் நுண்­க­லைக் கழ­கத்­தின் மகாத்மா காந்தி நினை­வக அரங்­கத்­தில் நடை­பெற்ற இந்­நி­கழ்­வில் பரத நாட்­டி­யத்­தின் தோற்­றம் தொடங்கி ஆங்­கி­லே­யர் காலம் வரை பரதக்கலை யில் ஏற்­பட்ட மாற்­றங்­கள் வர்­ணிக்­கப்­பட்­டது.

நாட்­டி­யம் மூலம் பழந்தமிழ் இலக்­கி­யத்­தை­யும் பர­தக்­கலை வர­லாற்­றை­யும் இளை­யர்­க­ளி­டம் கொண்டு செல்ல நட­ன­ம­ணி­கள் முனைந்­த­னர். நாட்­டி­யத்தை பழந்­தமிழ் மக்­கள் 'கூத்து' என்று அழைத்­த­தாகவும் சங்க இலக்­கி­யங்­க­ளி­லும் அவ்­வாறே குறிப்­பி­டப்பட்­ட­தாகவும் நிகழ்ச்­சி­யின் தொகுப்­பா­ளர் விளக்­கி­னார்.

கூத்­துக் கலையை வாழ்க்­கைத்­தொ­ழி­லா­கக் கொண்ட பெண்­கள் விற­லி­யர் என்­ற­ழைக்­கப்­பட்­ட­தும் அப்­பெ­ய­ருக்­கான கார­ண­மும் விளக்­கப்­பட்­டது. கவி­ஞர் கண்­ண­தா­சனின் 'மன்­ன­வன் வந்­தா­னடி தோழி' பாடல் வரி­க­ளுக்கு சிவ பிரிவீணா நடனமாடினார்.

இவ்­வாறு, விளக்க உரை­க­ளு­டன் சிலப்­ப­தி­கா­ரம், சர­பேந்­திர பூபாலக் குற­வஞ்சி போன்ற நூல்­களை குறிப்­பா­கக் கொண்ட நட­னங்­கள் தொடர்ந்து அரங்­கே­றின.

இவற்­றில், நடன ஆசி­ரி­யர்­க­ளு­டன் 'தர்­ஷன் ஃபைன் ஆர்ட்ஸ்', 'ஓம்­கார் ஆர்ட்ஸ்' பள்­ளி­க­ளின் இளைய நட­ன­ம­ணி­களும் பங்­கேற்­ற­னர். பழந்தமிழ் இலக்­கிய வரி­க­ளுக்கு நட­னம் அமைக்கும் இந்த முயற்­சியை நிகழ்ச்­சிக்கு சிறப்பு விருந்­தி­ன­ராக வந்­தி­ருந்த ஓம்­கார் ஆர்ட்­ஸின் திரு­மதி ஸ்ரீதேவி சிவ­ரா­ஜ­சிங்­கம் பாராட்­டி­னார். நட­னங்­க­ளைக் கண்­டு­

க­ளித்த மாண­வர்­களும் மக்­களும் நிகழ்ச்­சி­யின் இறு­தி­யில், நடன முத்­தி­ரை­க­ளை­யும் அசை­வு­க­ளை­யும் கற்று நட­ன­ம­ணி­க­ளு­டன் ஆடி மகிழ்ந்­த­னர்.

பிற்­ப­க­லில் தொடக்­கப் பள்ளி மாண­வர்­களும் மாலை­யில் பொதுமக்­களும் பங்கேற்றனர்.

இன்­னும் பல படைப்­பு­கள் மூலம் பழந்தமிழ் இலக்­கி­யத்­தை­யும் பரத வர­லாற்­றை­யும் இன்­றைய தமி­ழர்­க­ளி­டம், குறிப்­பாக இளை­ஞர்­க­ளி­டம் கொண்டு செல்ல எண்­ணு­வ­தாக மகூ­லம் கலைக்­கூ­டத்­தின் நடன ஆசி­ரி­யர்­க­ளான ஆ.மீன­லோ­ச­னி­யும் பா.சிவ பிரி­வீ­ணா­வும் தெரிவித்தனர்.

செய்தி: பொன்மணி உதயகுமார்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!