அடிமட்டத்திலிருந்து உச்சம் தொட்டவர்

மலே­சி­யா­வி­லி­ருந்து தனி­யாக 19 ­வயது இளை­ய­ராக சிங்­கப்­பூ­ருக்கு வந்த திரு மனோகரன் சுப்­பை­யா­வின் கல்­வித்­துறை, தமிழ்த்­துறை பய­ணங்­கள் அவர் முற்­றி­லும் எதிர்­பா­ரா­தவை.

இவ்­வாண்டு தனது 63 வயது நிறைவைக்காணும் திரு மனோகரன், 43 ஆண்டுகள் சேவைக்­குப் பிறகு ஆண்டு இறு­தி­யில் கல்­வித்­து­றை­யில் இருந்து ஓய்­வு­பெ­று­வார்.

தற்­போது ஆண்­டர்­சன்-சிராங்­கூன் தொடக்­கக் கல்­லூ­ரி­யின் முதல்­வ­ராக பணி­பு­ரிந்து வரும் அவர், ஓய்­வு­பெற்ற பின்­னர் வளர்­த­மிழ் இயக்­கத்­தின் தலை­ வராக தொடர்ந்து செய­லாற்­று­வார்.

இவர், 'சிண்டா' எனப்­படும் சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கத்­தின் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யா­க­வும் இருந்துள்ளார்.

பினாங்­கில் பிறந்து வளர்ந்த திரு மனோ­க­ரன், ஒன்­பது பிள்ளை களில் ஆக இளை­ய­வர்.

தாய் தந்­தை­யரை இழந்து, பின்­னர் மலே­சி­யா­வில் 'ஏ' நிலை தேர்வு எழு­திய பிறகு பல வேலை­க­ளுக்கு விண்­ணப்­பித்­தி­ருந்­தார். அவ­ரின் கத­வு­களை முத­லில் தட்­டி­யதோ, சிங்­கப்­பூ­ரி­லி­ருந்த ஓர் ஆசி­ரி­யப்­பணி வாய்ப்பே.

முதன்­மு­த­லில் தொடக்­கப்­பள்ளி ஆசி­ரி­ய­ராக நிய­மிக்­கப்­பட்ட திரு மனோ­க­ரன், கற்பித்த­லில் தனக்­கி­ருந்த ஆர்­வத்தை­யும் திற­னை­யும் கண்­ட­றிந்­தார்.

கடற்­ப­டை­யில் சேர இருந்த அவரை கல்­வித்­து­றை­யின் பக்­கம் விதி இழுத்­துச் சென்­றது என்­றார் அவர். ஆசி­ரி­யர் பணி­யைத் தொடங்­கிய அவர், 1999ல் இருந்து பள்ளி முதல்­வ­ராக, தொடக்­கப்­பள்ளி, உயர் நிலைப்­பள்ளி, தொடக்­கக் கல்­லூரி என பல கல்­விக் கழ­கங்­களில் தலை­மைத்­துவ அனு­ப­வம் பெற்று உள்­ளார்.

மாண­வர்­க­ளின், பெற்­றோர் களின் எதிர்­பார்ப்­பு­க­ளால் அலைக்­ க­ழிக்­கப்­படும் ஆசிரியர்­க­ளி­டத்­தில் நம்­பிக்­கையை விதைப்­பது பள்ளி முதல்­வ­ராக, தன் பணி­யின் முக்­கிய அம்­ச­மாக இருந்­துள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

அங் மோ கியோ உயர்­நிலை பள்­ளி­யின் ஆங்­கில துறை தலை வராக பணி­யாற்­றி­யது திரு மனோ கர­னின் மன­தில் நீங்கா இடம் பிடித்­துள்ளது. 1990லிருந்து 1996 வரை அங்கு பணி­யாற்­றி­ய­போது, பெரும்­பா­லும் குறைந்த வரு­மான குடும்­பங்­க­ளைச் சேர்ந்த மாண­வர் களின் ஆங்­கிலப் பாடத்­துக்­கான 'ஓ' நிலை தேர்ச்­சியை உயர்த்த முப்­பது சக ஆசி­ரி­யர்­க­ளு­டன் அவர் கடு­மை­யாக உழைத்­தார்.

ஆறு ஆண்­டு­களில், தேர்ச்சி விகி­தத்தை 73லிருந்து 98 விழுக் காட்­டிற்­கும், உயர்­தேர்ச்சி விகிதம் எட்­டி­லி­ருந்து 31 விழுக்காட்­டிற்­கும் உயர்த்­தி­னார்.

தனது வாழ்­நா­ளில் மறக்­க­மு­டி­யாத ஒரு சாத­னை­யாக இதை கரு­து­வ­தாக திரு மனோ­க­ரன் கூறி­னார். ஆசிரியர்­கள் மாண­வர்­க­ளின் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் ஆற்­றல் கொண்­டுள்­ள­னர் என்­பதை இது புலப்­ப­டுத்­து­வ­தாக அவர் கூறினார். வகுப்­பறை தாண்­டிய அனு­ப­வக் கல்­வி­யை­யும் நற்­பண்­பு­க­ளை­யும் வலி­யு­றுத்­து­வ­தற்­காக தெமா­செக் தொடக்கப் பள்ளி முதல்­வ­ராக இருந்த திரு மனோ­க­ரன் அதற்­கென்று சிறப்பு நேரத்தை ஒதுக்­கி­யி­ருந்­தார். இது, 2000ஆம் ஆண்­டில் படித்து, தற்­போது மலே­சி­யா­வில் மருத்துவராக பணி­பு­ரி­யும் திரு­மதி நாசுரா படூலியின் வாழ்­வில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

"மதிப்­பெண்­க­ளை­விட மனி­தர் களின் பண்பே வாழ்வை உயர்த்­தும் என்ற கருத்தை எனது பிள்ளை யிடத்­தில் கட்­டா­யம் வலி­யு­றுத்து வேன்," என்று திரு­மதி நாசுரா படூலி கூறி­யது திரு மனோ­கரனை நெகி­ழச் செய்­தது.

அங் மோ கியோ உயர்­நிலை பள்­ளி­யில் 1989ல் வர­லாற்று ஆசிரி யராக திரு மனோ­க­ரன் பணி­பு­ரிந்த சம­யத்­தில், தனது கன­வு­களை நன­வாக்க அவர் பெரி­தும் உறுதுணை­யாக இருந்­த­தா­க­வும் எதிர் காலத்தை வடி­வ­மைக்க அவர் நல்ல வழி­காட்­டி­யாக இருந்­த­தா­க­வும் கூறி­னார் 50 வயது திரு­வாட்டி மா லோசினி. தற்­போது தக­வல், தொடர்பு தொழில்­நுட்பத் துறை தலை­வ­ராக பணி­யாற்­றும் அவர், திரு மனோ­க­ரனை ஒரு மறக்­க­ மு­டி­யாத ஆசி­ரி­ய­ரா­கக் குறிப்­பிட்­டார்.

சிறப்புத் தேவை­யுள்ள மாண­வர்­கள், குடும்ப சிக்­கல்­கள் கொண்­டோர் ஆகி­யோ­ரின் கல்வி வாய்ப்பு­ களில் முன்­பி­ருந்­த­தை­விட அதிக கவ­னம் தற்­போது இருப்­பதை சுட்­டிய திரு மனோ­க­ரன், குறைந்த வரு­மான மாண­வர்­க­ளுக்கு நம் கல்­வித்­திட்­டம் இன்­னும் கூடு­த­லாக உத­வ­லாம் என்­பதை முன்­வைத்­தார்.

மலா­யும் ஆங்­கி­ல­முமே பள்­ளிப் பரு­வத்­தில் கற்­றி­ருந்த திரு மனோ கர­னுக்கு, தந்தை நிய­மித்­தி­ருந்த தமிழ் துணைப்­பாட வகுப்பு ஆசிரி யரே தமிழ்­மொ­ழி­யில் எழுதுவதை­யும் பேசு­வ­தை­யும் அறி­மு­கப்படுத்­தி­னார். அதன் பின்­னர், கல்­வித்­து­றை­யில் சுமார் முப்­பது ஆண்­டு­ க­ளுக்கு ஆங்­கி­லத்­தில் கற்­பித்­துக்­கொண்­டி­ருந்த அவர், எதிர்­பாராத வகை­யில் தமிழ்த் துறை­யில் நுழைந்த சம­யத்­தில் தமி­ழில் பேச தயங்­கி­னார்.

தமிழ்ப் படங்­கள், வச­னங்­கள், பாடல்­கள் ஆகி­ய­வற்றை அவர் ரசித்­த­தும், அன்­றா­டம் செய்­தித்­தாள்­களும் நூல்­களும் வாசித்­த­தும் அவ­ருக்­குக் கைகொ­டுத்­தது.

தமிழ் உண­வ­கங்­களில் உணவு வாங்­கு­வதி­லி­ருந்து, முடிந்த அள­வுக்கு எல்லா இடங்­க­ளி­லும் தமிழில் பேச முயற்சி செய்­தார் அவர்.

ஓய்­வு­பெற்ற பின்­னர், சமூ­கத்­துக்­குப் பங்­காற்­றும் வகை­யில் தலை­மைத்­துவ பயிற்­று­விப்­பா­ள­ராக இல­வச சேவை­கள் வழங்க திரு மனோ­க­ரன் விரும்புகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!