ஹாக்கி பயிற்றுவிப்பாளரை தேடிய முன்னாள் மாணவர்கள்

ஹாக்கி பயிற்றுவிப்பாளரை தேடிய முன்னாள் மாணவர்கள்

2 mins read
e797cd4c-74b2-438c-99f3-44ae3d1b35dd
(இடது படம்) குவீன்ஸ்டவுன் தொடக்கப் பள்ளியின் 1981ஆம் ஆண்டு ஹாக்கிக் குழுவுடன் அதன் பயிற்றுவிப்பாளர் பாலசந்திரன். (மேல் படம்) ஸ்டோம்ப் செய்தித் தளம் மூலம் திரு பாலாவைத் தேடிக் கண்டுபிடிக்க கோரிக்கை விடுத்த ரிச்சர்ட்டுக்கு (சிவப்பு சட்டை) பக்கத்தில் முன்னாள் பயிற்றுவிப்பாளர் கே. பாலசந்திரன். படங்கள்: ஸ்டோம்ப் -
multi-img1 of 2

'குவீன்ஸ்­ட­வுன்' தொடக்­கப் பள்­ளி­யின் 1981ஆம் ஆண்டு 'ஹாக்கி' குழு­வில் அங்­கம் வகித்த மாண­வர்­கள் ஐவர், 41 ஆண்­டு­க­ளுக்கு பிறகு 'ஸ்டோம்ப்' இணை­யச் செய்­தித் தளம் மூலம் தங்­க­ளின் பயிற்­று­விப்­பா­ள­ரைக் கண்­டு­பி­டித்­துள்­ள­னர்.

ரிச்­சர்ட் என்­ப­வர் 'ஸ்டாம்ப்' இணை­யத் தளம் வழி வெளி­யிட்­ட கோரிக்­கை­யில், 70 வயதுகளில் இருக்­கக்­கூ­டிய தமது குழு­வின் முன்­னாள் ஹாக்கி பயிற்­று­விப்­பா­ள­ரான திரு கே பாலச்­சந்­தி­ர­னைப் பற்றி விவ­ரம் தெரிந்­தால் 'ஸ்டோம்ப்' இணை­யத் தளத்தை அல்­லது 'வாட்ஸ்­அப்' செயலி மூலம் தம்­முடன் தொடர்­பு­கொள்­ளு­மாறு கேட்­டுக்­கொண்­ட­து­டன் ஹாக்கி குழு­வின் பழைய புகைப்­ப­டத்­தி­லி­ருந்த பயிற்­று­விப்­பா­ள­ரின் படத்­தை­யும் இணைத்­தி­ருக்­கி­றார்.

இரண்டு நாட்­களில் திரு கே பாலச்­சந்­தி­ர­னின் மகன் 'ஸ்டோம்ப்' இணை­யத் தளத்­தைத் தொடர்பு கொண்­டார். 'ஸ்டோம்ப்'பின் உதவி யோடு முன்­னாள் மாண­வர்­கள் ஃபூ பியெங், யீ பூன், செர் ஹுவாட், குணா­ளன், கோக் வெய், டேனி ஆகி­யோர் 41 ஆண்­டு­க­ளுக்கு பிறகு இம்­மா­தம் 15ஆம் தேதி அவரை சந்­தித்து உரை­யா­டி­யுள்­ள­னர்.

இந்­தச் சந்­திப்பு நிகழ்வதற்கு உத­வி­யாக இருந்த 'ஸ்டோம்ப்' செய்­தித் தளத்­துக்கு ரிச்­சர்ட் தமது நன்­றியை தெரி­வித்தார்.

திரு கே பாலச்­சந்தி ரனுக்கு இப்­போது 64 வய­தா­கி­யுள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

இந்­தச் சந்­திப்பு நிக­ழுமா என்ற எதிர்­பார்ப்பு இருந்­ததா என்று கேட்­ட­போது, 'ஸ்டோம்ப்' மூலம் அவ­ரைக் கண்டு ­பி­டிக்க முடி­யும் என்ற நம்­பிக்கை அவர்­க­ளுக்கு இருந்­த­தா­கக் கூறி­னார்.

சந்­திப்­பின்­போது, 41 ஆண்டு களில் அவர்­க­ளின் குடும்ப வாழ்க்­கை­யி­லும் சொந்த வாழ்க்­கை­யி­லும் ஏற்­பட்­டுள்ள மாற்­றங்­க­ளைப் பற்றி உரை­யா­டி­ய­தோடு, 'ஹாக்கி' பயிற்சி காலத்­தி­லி­ருந்து அவர்­கள் நினை­வில் இருக்­கும் தரு­ணங்­க­ளைப் பற்­றி­யும் பேசி இருக்­கி­றார்­கள்.

தங்­க­ளின் 'ஹாக்கி' திறன்­களை நினை­வு­கூர்ந்த இவர்­கள், 12 வய­திற்கு உட்­பட்ட விளை­யாட்­டா­ளர்­களுக்­காக 1981ல் நடந்த தேசிய 'ஹாக்கி' போட்­டி­யின்­போது நடந்த நகைச்­சுவை மிக்க தரு­ணங்­க­ளை­யும் நினை­வு­ப­டுத்தி உரை­யா­டி­னார் கள்.

'பாடாங்' திட­லில் நடந்த இப்­போட்­டி­யில் ஒரு பெனால்டி வாய்ப்பு மூலம் வெற்றி வாய்ப்பை நழு­வ­விட்­டி­ருந்­தா­லும் 'பாடாங்' திட­லில் விளை­யாட கிடைத்த வாய்ப்பை இவர்­கள் பெரு­மை­யா­கக் கரு­து­கி­றார்­கள்.

திரு கே பாலச்­சந்­தி­ரன் தங்­கள் பயிற்­று­விப்­பா­ள­ராக மட்­டு­மல்­லா­மல், ஒரு வழி­காட்­டி­யா­க­வும் இருந்­த­வர். அவ­ரு­டன் நெருக்­க­மாக ஓர் உறவை இவர்­கள் கொண்­டி­ருக்­கி­றார்­கள். அவரை இத்­தனை ஆண்­டு­கள் கடந்த பிறகு சந்­தித்­தது மன­நி­றைவை அளித்­துள்­ள­தாக ரிச்­சர்ட் பகிர்ந்­துகொண்­டார்.

குழு­வில் மீத­முள்ள மற்ற ஐந்து முன்­னாள் மாண­வர்­க­ளை­யும் சந்­திக்க இவர்­கள் விரும்­பு­கி­றார்­கள். குறிப்­பாக, அவர்­க­ளின் குழு­வின் கோல் காப்­பா­ள­ரான பார்த்­த­சா­ரதி, கணே­சன், ஸுல்­கி­ஃபிலி ஆகி­யோரை அவர்­கள் கண்­டு­பி­டிக்க வாச­கர்­க­ளின் உத­வியை கேட்­டுள்­ள­னர்.