கொண்டைக்கடலை கறி

நான்கு பேருக்குப் பரிமாறக்கூடிய அளவு: 1017 கிலோ-கலோரி

ஒரு பரிமாறல் அளவு: 254 கிலோ-கலோரி

தேவையான பொருட்கள்:

- 100 கிராம் வெங்காயம், வெட்டப்பட்டது

- 200 கிராம் தக்காளி, வெட்டப்பட்டது

- 20 கிராம் இஞ்சி, வெட்டப்பட்டது

- 50 கிராம் பூண்டு, வெட்டப்பட்டது

- 2 மேசைக்கரண்டி கனோலா எண்ணெய் (HCS logo - ஆரோக்கிய தெரிவு முத்திரை)

- ½ தேக்கரண்டி உப்பு

- 1 தேக்கரண்டி சீரகத்தூள்

- 1 தேக்கரண்டி மஞ்சள்தூள்

- 1 தேக்கரண்டி மல்லித்தூள்

- 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள்

- 1 தேக்கரண்டி கரம் மசாலா

- தேவையான அளவு தண்ணீர்

- 500 கிராம் கொண்டைக்கடலை (தகரப்பெட்டிகளில் அடைத்துப் பாதுகாக்கப்பட்டது), அலசி, நீர்வடித்தது

- 3 கிராம் இஞ்சி கீற்றுகள் (அழகு படுத்த)

செய்முறை:

1. வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரவை இயந்திரத்தில் சாந்தாக அரைக்கவும். அரைத்த சாந்தைத் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

2. வாணலியில் எண்ணெய்விட்டு மிதமான அனலில் சூடாக்கவும். அரைத்த சாந்தை வாணலியில் போட்டு, லேசாகப் பொன்னிறப் பழுப்பு நிறமாக மாறி வாசம் வரும்வரை வதக்கவும்.

3. சாந்துடன் உப்பு, சீரகத்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், சிவப்பு மிளகாய்த்தூள், கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்த்து, 3 நிமிடங்களுக்கு நன்றாகக் வதக்கவும்.

4. கலவை நன்கு சூடானதும், தண்ணீரைச் சேர்த்து கெட்டியான குழம்புபோல வரும் வரை கிளறுங்கள். அடுத்து அதைக் கொதிக்கவிடவும்.

5. சுத்தம் செய்து வைத்துள்ள கொண்டைக்கடலையைச் சேர்த்து நன்கு வேக வைக்கவும். கொண்டைக்கடலை வெந்து கொண்டிருக்கும்போதே, அவற்றில் சிலவற்றை நசுக்கவும். வாணலியை மூடிவைத்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.

6. இஞ்சி கீற்றுகளைக்கொண்டு அழகுபடுத்திச் சூடாகப் பரிமாறவும்.

சமையல் குறிப்பு: சுகாதார மேம்பாட்டு வாரியம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!