சிங்கப்பூரில் புதிதாக 14 பேருக்கு கிருமித்தொற்று

கொவிட்-19 கிருமித்தொற்று கட்டுப்பாடுகள் சில தளர்ப்பட்டது தொடர்ந்து இன்று சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் திரண்ட மக்கள் கூட்டம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சுகாதார அமைச்சின் தகவல்படி, இன்று ஜூன் (15ஆம் தேதி) புதிதாக 14 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவை அனைத்துமே சமூக அளவிலான தொற்றாக வகைப்படுத்தப்படுகிறது.

சமூகத்தில் தொற்று உறுதியான 9 பேர் முன்னதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட குழுமங்களுக்கு தொடர்பு உடையவர்கள்.

எஞ்சிய ஐவருக்கு முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்பு இல்லை.

பாதிக்கப்பட்ட குழுமங்களுக்கு தொடர்புடைய 9 பேரில், ஐவர் ஏற்கெனவே தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுவிட்டார்கள்.

எஞ்சிய நால்வருக்கு கண்காணிப்பு பரிசோதனை மூலம் தொற்று உறுதியானது.

வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் எவரும் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிப்படையவில்லை.

அதேபோல் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்களில் எவருக்கும் கிருமித்தொற்று பாதிப்பு இல்லை.

சிங்கப்பூரில் இதுவரை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62,315 ஆக உள்ளது.

கடந்த திங்கள் இரவு நிலவரப்படி, 138 பேர் கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

235 பேர் சமூக தனிமைப்படுத்தும் வளாகங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்

#கொவிட்-19 #covid-19 #சிங்கப்பூர்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!