இந்தோனீசியா: நிலவரத்தைச் சமாளிக்க மருத்துவமனையான விளையாட்டு வளாகம்

இந்­தோ­னீ­சி­யா­வில் கொரோனா பாதிப்­பும் மர­ணங்­களும் கூடு­கின்­றன. இந்த நிலை­யில், அந்த நாடு 2018ல் ஆசிய விளை­யாட்­டுப் போட்­டி­களை நடத்­து­வ­தற்­காக கட்­டப்­பட்ட விளை­யாட்டு வீரர்­கள் கிரா­மம் என்ற வளா­கத்தை அவ­ச­ர­கால மருத்து­வ­ம­னை­யாக மாற்றி இருக்­கிறது. படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் கொரோனா பாதிப்­பும் மர­ணங்­களும் கூடு­கின்­றன. இந்த நிலை­யில், அந்த நாடு 2018ல் ஆசிய விளை­யாட்­டுப் போட்­டி­களை நடத்­து­வ­தற்­காக கட்­டப்­பட்ட விளை­யாட்டு வீரர்­கள் கிரா­மம் என்ற வளா­கத்தை அவ­ச­ர­கால மருத்து­வ­ம­னை­யாக மாற்றி இருக்­கிறது.

அந்த மருத்­து­வ­ம­னை­யில் 4,000 பேருக்­கும் அதிக கொரோனா நோயா­ளி­க­ளுக்கு இடமிருக்­கும் என அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

விளை­யாட்டு வீரர்­கள் கிரா­மம் தலை­ந­கர் ஜகார்த்­தா­வில் அமைந்து இருக்­கிறது. அதில் 10 கட்­ட­டங்­கள் இருக்­கின்­றன. அவற்­றில் நான்கு கட்­ட­டங்­கள் மருத்­து­வ­ம­னை­யாக மாற்­றப்­பட்டு இருக்­கின்­றன. அவை 7,000 பேருக்­கும் அதிக நோயாளிகளுக்கு இடம் அளிக்க முடி­யும்.

அங்கு கொரோனா சிறப்­புப் படை மருத்­துவ ஊழி­யர்­களும் 4,208 கொரோனா நோயா­ளி­க­ளுக்­கும் சிகிச்சை வ­சதி இருக்­கிறது.

கொரோனாவைக் கையா­ளு­வ­தற்­குத் தேவை­யான வளங்­களை அந்த அவ­ச­ர­கால மருத்­து­வ மனைக்கு அர­சாங்­கம் வழங்­கும் என்று அர­சு நிறு­வ­னங்­கள் துறை அமைச்­சர் எரிக் தோஹிர் அறிக்கையில் தெரி­வித்­தார்.

இந்­தோ­னீ­சி­யா­வில் சனிக்­கி­ழ­மை­யன்று புதி­தாக 81 பேரை கொரோனா தொற்­றி­யது. அங்கு மொத்­தம் 450 பேர் பாதிக்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள். அந்­தக் கிருமி 38 பேரைக் கொன்­று­விட்­டது. தென்­கி­ழக்கு ஆசி­யா­வி­லேயே கொரோனா மர­ணம் இந்­தோனீ சியா­வில்­தான் அதி­கம்.

கொரோனா கார­ண­மாக ஜகார்த்­தா­வில் அடுத்த இரண்டு வாரங்­க­ளுக்கு அவ­ச­ர­நிலை அம­லில் இருக்­கும் என்று அந்த நகர ஆளு­நர் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளார்.

கொரோனா நில­வ­ரத்­துக்கு ஏற்ப விளையாட்டு கிரா­மத்­தில் இருக்­கும் இதர பல கட்­ட­டங்­களும் மருத்­து­வ­ம­னை­க­ளாக மாற்­றப்­படும் என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்து உள்­ள­னர்.

அங்­குள்ள 10 கட்­ட­டங்­களும் மருத்­து­வ­ம­னை­கள் ஆனால் 20,000 நோயா­ளி­க­ளுக்கு இடம் அளிக்க முடி­யும் என்று பொதுப் பணி மற்­றும் வீட்டு வச­தித் துறை அமைச்­சின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­த­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னம் கூறி­யது.

அதிக மக்­கள் வாழும் நாடு­களில் நான்­கா­வது இடத்தை வகிக்­கும் இந்­தோ­னீ­சியா கொரோனா சோத­னை­களை மந்­த­மா­கத் தொடங்கி இருக்­கிறது என்று குறை கூறப்­ப­டு­கிறது.

இந்­தோ­னீ­சி­யா­வில் கொரோனா தொற்­றி­ய­வர்­க­ளுக்­கும் மர­ணம் அடைந்­த­வர்­க­ளுக்­கும் இடைப்­பட்ட விகி­தாச்­சா­ரம் 8.7 விழுக்­கா­டாக இருக்­கிறது. இது உல­க­ள­வில் ஆக அதி­கம். இத்­தா­லி­யில் கூட இந்த விகி­தம் 8.3 விழுக்­கா­டா­கத்­தான் உள்­ளது.

இந்­தோ­னீ­சிய நில­வ­ரங்­களை எல்­லாம் வைத்­துப் பார்த்­தால் கொரோனா பாதிப்பு அங்கு தெரி­விக்­கப்­ப­டு­வ­தை­விட அதி­க­மாக இருக்­கக்­கூடும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!