'ஊழியர் தங்கும் விடுதிகளில் கிருமி பரவல் விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது'

விடுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கிருமிப் பரவல் நடவடிக்கைகள் பலனளித்துள்ளதாக பேராசிரியர் டியோ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உள்ள ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிப்போரிடையே கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை, அடுத்த மூன்று அல்லது நான்கு வாரங்களில், 100க்கும் கீழே குறையக்கூடும் என்று தேசிய பல்கலைக்கழகத்தின் சா சுவீ ஹாக் பொதுச் சுகாதாரப் பள்ளியின் பேராசிரியர் டியோ யிக் யிங் கூறியுள்ளார்.

கடந்த மாதம் 20ஆம் தேதி சிங்கப்பூரில் ஆக அதிகமாக 1,426 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 1,369 பேர் விடுதிகளில் தங்கியிருப்போர்.

ஆனால், நேற்றைய நிலவரம் வேறு. நேற்று கிருமித்தொற்று கண்ட 383 பேரில் 381 பேர் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.

விடுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கிருமிப் பரவல் நடவடிக்கைகள் பலனளித்துள்ளதாக பேராசிரியர் டியோ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

அங்கு வசிப்போரிடையே கிருமி பரவும் விகிதம் வெகுவாகக் குறைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். R0 எனப்படும் கிருமி பரவல் விகிதம் தற்போது 0.5ஆகக் குறைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

R0வின் அளவு 1 என்றால், கிருமி பரவல் நிகழும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒருவரிடமிருந்து மற்றொரு நபருக்கு கிருமி பரவும் விகிதமாகும்.

கடந்த 14 நாட்களாக, புதிதாக கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையைவிடக் குறைவு.

இதற்கிடையே, மேற்கொள்ளப்பட்ட கிருமித்தொற்று பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததும் குறைவான எண்ணிக்கையில் கிருமித்தொற்று பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவப் பள்ளியின் தொற்றுநோய்கள் துறை நிபுணர் பால் தம்பையா குறிப்பிட்டார்.

நோன்புப் பெருநாள் விடுமுறை காரணமாக கடந்த இரு நாட்களாக, குறைந்த எண்ணிக்கையில் கிருமித்தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டிருந்தது.

ஏற்கெனவே கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரொனாவுக்கு எதிரான தற்காலிக எதிர்ப்பு சக்தி இருந்தாலும், சிங்கப்பூரில் இன்னும் பலர் கிருமித்தொற்றுக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஆயினும் நாம் ஒவ்வொருவரும் நமது பங்கையாற்றி உரிய நடைமுறைகளைப் பின்பற்றினால் பாதிக்கப்படுவதிலிருது தப்பலாம் என்றார் பேராசிரியர் டியோ.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online

சிங்கப்பூர்
கொவிட்-19
வெளிநாட்டு ஊழியர்
விடுதி
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!