சிங்கப்பூரில் கொவிட்-19 நோயாளிகள் சென்ற பொது இடங்கள் பற்றிய விவரம்

சிங்கப்பூரில் ஜூன் முதல் தேதியிலிருந்து இரண்டாம் கட்டத் தளர்வுகள் நடப்பில் இருக்கும் நிலையில், கொரோனா கிருமித்தொற்று கண்டவர்கள்  (உறுதி செய்யப்படுவதற்கு முன்பாக) கிருமிப் பரவல் நிகழக்கூடிய சாத்தியமுள்ள நிலையில் சென்று வந்த இடங்களைப் பற்றிய விவரத்தையும் சுகாதார அமைச்சு நேற்று (ஜூன் 22) வெளியிட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் ஜூன் முதல் தேதியிலிருந்து இரண்டாம் கட்டத் தளர்வுகள் நடப்பில் இருக்கும் நிலையில், கொரோனா கிருமித்தொற்று கண்டவர்கள் (உறுதி செய்யப்படுவதற்கு முன்பாக) கிருமிப் பரவல் நிகழக்கூடிய சாத்தியமுள்ள நிலையில் சென்று வந்த இடங்களைப் பற்றிய விவரத்தையும் சுகாதார அமைச்சு நேற்று (ஜூன் 22) வெளியிட்டது.

இரண்டு ஷெங் சியோங் பேரங்காடிகள், ஒரு என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடி ஆகியவற்றுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றிருந்ததாக சுகாதார அமைச்சு நேற்றிரவு அறிவித்தது.

பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் எண் 7 ஜூரோன் வெஸ்ட் அவென்யூ 5ல் இருக்கும் ஷென் சியோங் பேரங்காடியில் ஜூன் 9ஆம் தேதி காலை 7.50 முதல் 8.20 மணி வரை இருந்தார்.

எண் 19, சிராங்கூன் நார்த் அவென்யூ 5ல் இருக்கும் ஷென் சியோங் பேரங்காடியில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 19) கொவிட்-19 நோயாளி ஒருவர் மாலை 5.15 முதல் 6.05 மணிவரை இருந்தார்.

கிருமித்தொற்று கண்ட மற்றொரு நபர் 447A ஜாலான் காயுவில் இருக்கும் ஃபேர்பிரைஸ் கடையில் இம்மாதம் 15ஆம் தேதி மாலை 6.25 முதல் இரவு 8.55 வரை இருந்தார்.

கீழ்க்கண்ட அட்டவணையில் முழு விவரங்கள்:

(இந்த அட்டவணையில் குடியிருப்புப் பகுதிகள், வேலையிடங்கள், சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் பொதுப் போக்குவரத்து ஆகியவை சேர்த்துக்கொள்ளப்படவில்லை)

தேதி நேரம் இடம்
8 ஜூன் 0900 மணி முதல் 1015 மணி வரை பயனியர் சென்டர்
8 ஜூன் 1550 மணி முதல் 1700 மணி வரை பொங்கோலில் இருக்கும் வாட்டர்வே பாயின்ட்
8 ஜூன் 0910 மணி முதல் 0945 மணி வரை 7 காக்கி புக்கிட் அவென்யூ 3ல் உள்ள காக்கி புக்கிட் மனமகிழ் நிலையம் (POSB)
8 ஜூன் 1330 மணி முதல் 1405 மணி வரை 18 மர்சிலிங்லேன்
8 ஜூன் 1855 மணி முதல் 1925 மணி வரை 301 கேலாங் ரோட்டில் இருக்கும் செங் சியோங் பேரங்காடி
9 ஜூன் 1950 மணி முதல் 2035 மணி வரை முஸ்தஃபா சென்டர்
9 ஜூன் 2015 மணி முதல் 2045 மணி வரை 20 லெங்கோக் பாருவில் இருக்கும் ஃபேர்பிரைஸ் கடை
10 ஜூன் 1100 மணி முதல் 1130 மணி வரை பூன் லே ஷாப்பிங் சென்டர்
11 ஜூன் 1730 மணி முதல் 1800 மணி வரை 86 சையது ஆல்வி ரோட்டில் இருக்கும் ஸ்ரீ முருகன் டிரேடிங்
14 ஜூன் 1730 மணி முதல் 1800 மணி வரை தி நியூ வோர்ல்ட் சென்டரில் இருக்கும் செங் சியோங் பேரங்காடி
14 ஜூன் 2000 மணி முதல் 2100 மணி வரை 803 கிங் ஜார்ஜஸ் அவென்யூவில் இருக்கும் பிரைம் பேரங்காடி
15 ஜூன் 1825 மணி முதல் to 2055 மணி வரை ஃபேர்பிரைஸ் பேரங்காடி ((447A ஜாலான் காயு)
19 ஜூன் 1715 மணி முதல் to 1805 மணி வரை ஷெங் சியோங் பேரங்காடி (19 சிராங்கூன் நார்த் அவென்யூ 5)

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

சிங்கப்பூர்
கொவிட்-19
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!