இறுதிக் கட்டத்தில் நோய் தடுப்பு மருந்து பரிசோதனை

அமெரிக்காவின் சான் டியேகோ சோதனை கூடத்தில் ஆர்க்டுரஸ் தியரபியுடிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஆய்வு உதவியாளர் மரியோன் ஹோங், கொவிட்-19 கொடுந்தொற்று நோய்க்கான தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடிக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்க உயிரியல் தொழில்நுட்ப நிறுவனமான மோடர்னா, கொவிட்-19 நோய்த் தடுப்பு மருந்தை மனிதர்களிடம் செலுத்திப் பார்க்கும் பரிசோதனையில் தான் இறுதிக் கட்டத்தை எட்டவுள்ளதாக தெரிவித்துள்ளது. இம்மாதம் 27ஆம் தேதி அந்தப் பரிசோதனை இறுதிக் கட்டத்தை எட்டவிருப்பதாக அது கூறியது.

அமெரிக்காவில் நடத்தப்படும் இந்த மூன்றாம் கட்ட பரிசோதனையில் 30,000 பேர் பங்கேற்கவுள்ளனர்.

Sars-CoV-2 எனும் கிருமித்தொற்றை இந்த மருந்தால் தடுக்க முடியுமா என்பது பற்றி தெரிந்துகொள்ள இந்தப் பரிசோதனை உதவும். மனிதர்களிடம் கிருமி தொற்றினாலும் கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் ஏற்படுவதை நோய்த் தடுப்பு மருந்து தடுக்குமா என்பது பற்றியும் பரிசோதனையில் தெரிந்துகொள்ள முடியும்.

அறிகுறிகள் தென்பட்டாலும் நிலைமை மோசமடைவதைத் தவிர்க்க இந்த மருந்து உதவினால்கூட அது வெற்றியாகக் கருதப்படலாம். நோய்த் தடுப்பு மருந்தின் இறுதிக் கட்ட பரிசோதனை அக்டோபர் 27ஆம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா கிருமிக்கு எதிராக தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் உலகளாவிய போட்டியில் மோடர்னா நிறுவனம் முன்னணி வகிப்பதாக கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!