கொவிட்-19 மரண எண்ணிக்கை: ஒரு மில்லியன் ஆனது, இரண்டு மில்லியன் ஆகலாம்

ஓராண்டுக்கும் குறைவான காலக்கட்டத்தில் சீனாவில் தோன்றிய கொவிட்-19 கிருமிப்பரவலால் இறந்தோரின் எண்ணிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு மில்லியனைக் கடந்தது. இந்திய குடிசைகள் முதல் அமெரிக்க பெருநகரங்கள் வரை இந்தக் கிருமிப்பரவல் உலகப் பொருளியலை சீர்குலைத்ததுடன் உலக அரசியலிலும் தனிமனிதர்களின் வாழ்க்கையிலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுப்பயணிகள், நிகழ்ச்சி பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள் வீட்டிலேயே தங்கக் கட்டயப்படுத்தப்பட்ட நிலையில் உலக விளையாட்டுப் போட்டிகள், நேர்முக கேளிக்கை, அனைத்துலக சுற்றுலா உள்ளிட்டவை தொடர இயலாமல் போனது. உலகில் நான்கு பில்லியன் பேருக்கும் அதிகமானோர் மீது விதிக்கப்பட்ட கடுமையான முடக்கநிலை கட்டுப்பாடுகள் கிருமிப்பரவலின் வேகத்தை ஓரளவு குறைந்துள்ளது. ஆயினும் இந்தக் கட்டுப்பாடுகளின் தளர்வால் நோய்ச்சம்பவ எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர் நேரப்படி திங்கட்கிழமை காலை 6.30 மணி நிலவரப்படி 33.018.877 பேருக்கு கொவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 1,000,0009 பேர் உயிரிழந்ததாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தின் கணக்கெடுப்பு காட்டுகிறது. அமெரிக்காவில் மரண எண்ணிக்கையான 200,000 உலகிலேயே ஆக அதிகமானது. அதற்கு அடுத்த நிலைகளில் முறையே பிரேசில், இந்தியா, மெக்சிகோ, பிரிட்டன் ஆகியவை உள்ளன.

நோய்த்தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் விரைந்து செயல்படும் நேரத்தில் உலக அரசாங்கங்கள் மக்களின் உயிரை மட்டுமின்றி நாட்டின் பொருளியலையும் முடிந்தவரை பாதுகாக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

உலகிலுள்ள பல்வேறு நகரங்களின் கடைகள், பொதுப் போக்குவரத்து மற்றும் உணவகங்களில் முகக்கவசங்களை அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற வழக்கங்கள் நடப்பில் உள்ளன.

செப்டம்பரின் நடுப்பகுதியில் உலகின் பல்வேறு பகுதிகளில் கிருமித்தொற்றுகள் இதுவரை இல்லாத வேகத்தில் ஏற்றம் கண்டுள்ளது. உலக நாடுகள் இன்னும் கூடுதலாக இணைந்து செயல்படத் தவறினால் மரண எண்ணிக்கை இரண்டு மில்லியனுக்கு இரட்டிப்பாகலாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

“ஒரு மில்லியன் மிகக் கொடூரமான எண்ணிக்கை. அது இரண்டு மில்லியனாக அதிகரிப்பதற்கு முன்னர் நடந்தது பற்றி நாம் அனைவரும் யோசிக்கவேண்டும். இரண்டு மில்லியன் மரணங்களைத் தடுப்பதற்கான பணிகளை ஒன்றிணைந்து செய்ய நாம் தயாராக உள்ளோமா?” என்று உலக சுகாதார நிறுவனத்தின் அவசர நடவடிக்கைகளுக்கான இயக்குநர் மைக்கல் ராயன் தெரிவித்தார்.dm

இக்கிருமிப்பரவல் பணக்காரர்களையும் பிரபலமானவர்களையும் விட்டு வைக்கவில்லை. பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் இதனால் ஒரு வாரத்திற்கு மருத்துவமனையில் தங்க நேர்ந்தது. பிரபல பாடகர் மடோனா, பிரான்சிலிருந்து அமெரிக்காவுக்குத் திரும்பிய பிறகு அவருக்கு கொவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஐஸ்வர்யா ராய் பச்சனும் அவரது குடும்பத்தாரும் பாதிக்கப்பட்டிருந்தனர். கொவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்ட இந்தியத் திரைப்படப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இறந்தார்.

உலகப் பொருளியலின் வருங்காலம் தொடர்ந்து சவால் நிறைந்ததாக இருந்தாலும் நிலைமை சீரடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அனைத்துலக பண நிதியம் தெரிவித்தது. தற்போது இறுதிக் கட்ட சோதனையில் இருக்கும் ஒன்பது தடுப்பூசி மருந்துகள் அடுத்த ஆண்டு வெளியிடப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அவை உலகம் முழுவதும் எப்போது, எப்படி விநியோகம் செய்யப்படும் என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!