நூல் அறிமுகம்: உயிரினப் பழமொழியில் அறிவியல் உண்மை

நூலா­சி­ரி­யர் : முனைவர் மா. தமிழ்செல்வி,

முனைவர் கா. அப்துல் ஜாபர் அலி

சென்னை : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் [பி] லிட்., 2014. குறியீட்டு எண்: Tamil 398.994811 TAM

அனைத்து உரிமைகளும் காப்புரிமைக்கு உட்பட்டவை.

தமிழ் மொழி­யின் வாய்­மொழி இலக்­கி­ய­மா­கக் கரு­தப்­பட்டு அன்­றாட வாழ்­வில் பன்­நெ­டுங்­காலந்­தொட்டே பயன்­ப­டுத்­தப்­பட்டு வரும் பழ­மொ­ழி­களில் விலங்­கி­னங்­களை மேற்­கோள் காட்டி கூறப்­படும் தமிழ்ப் பழ­மொ­ழி­களை ஆரா­யும் நோக்­கு­டன் “உயி­ரி­னப் பழ­மொ­ழி­யில் அறி­வி­யல் உண்மை” எனும் தலைப்­பு­டன் இந்­நூலினை முனை­வர் மா. தமிழ்­செல்வி, முனை­வர் கா. அப்­துல் ஜாபர் அலி ஆகிய இரு­வ­ரும் இணைந்து எழு­தி­யி­ருக்­கின்­றார்­கள்.

தமிழ்ப் பழ­மொ­ழி­களில் கூறப்­பட்­டுள்ள அறி­வி­யல் உண்­மை­களை மிக­வும் எளிய முறை­யில் வாச­கர்­கள் புரிந்­து­கொள்­ளும் வகை­யில் அனைத்து பழ­மொ­ழி­களும் விளக்­கப்­பட்­டுள்­ளன. உதா­ர­ணத்­திற்கு “ஆட்டு உரம் ஓராண்டு நிற்­கும் மாட்டு உரம் ஆறாண்டு நிற்­கும்” எனும் பழ­மொ­ழி­யில் விவ­சா­யத்­தில் பயன்­ப­டுத்­தப்­படும் உரத்­தின் தன்­மை­யும் விலங்­கி­னங்­க­ளின் அறி­வி­யல் சார்ந்த விளக்­கங்­களும் விரி­வாக விளக்­கப்­பட்­டுள்­ளன.

மற்­றொரு பழ­மொ­ழி­யில் “யானை வயிறு நிறைந்­தா­லும் ஆடு வயிறு நிறை­யாது” என்று வீட்டு விலங்­கான அசை­போ­டும் ஆட்­டின் வயிற்­றினை, அசை­போடா காட்டு விலங்­கான யானை­யின் பெரிய வயிற்­று­டன் ஒப்­பி­டும் பழ­மொழி கூறும் உண்­மை­களை ஆராய்ந்து விளக்­கி­யி­ருக்­கி­றார்­கள். இப்­ப­ழ­மொ­ழியை மனித வாழ்­வு­டன் ஒப்­பி­டு­கை­யில் ஒரு­வ­ருக்­குக் கிடைக்­கும் கல்­விச் செல்­வ­மா­னது ஆட்­டின் வயிற்­றி­னைப் போன்­றும், பொருட்­செல்­வ­மா­னது யானை வயிற்­றி­னைப் போன்­றும் இருத்­தல் வேண்­டும் என்று அறி­வு­றுத்­தப்­ப­டு­கிறது.

மேலும் இதுபோன்று உயிரினங்கள் குறித்த பல பழமொழிகளின் விளக்கங்களை இந்நூலின் வாயிலாக வாசித்தறியும்போது நம் முன்னோர்களின் அறிவுக்கூர்மையை அறிய முடிகிறது.

இந்த நூல் கிடைக்­கும் நூல­கங்­க­ளின் விவ­ரங்­க­ளைப் பெற: http://catalogue.nlb.gov.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!