சுடச் சுடச் செய்திகள்

ஸ்டாலின்: மூன்றாம் அணி சாத்தியமல்ல

ஆலந்தூர்: இந்தியாவில் பாஜக, காங்கிரசைத் தவிர்த்து புதிதாக மற்றொரு வலிமையான மூன்றா வது கூட்டணி அமையும் வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தோன்ற வில்லை என்று  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

தூத்துக்குடி செல்வதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “தெலுங் கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மூன்றாவது அணியை உருவாக்கு வதற்காக தமிழகம் வரவில்லை. அவர் ஆலயங்களில் வழிபாடு நடத்தவே வந்தார். 

“இந்தியாவில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இருப் பினும் வரும் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு ஒரு முடிவு தெரியவரும்,” என்றார்.

இதற்கிடையே, சென்னை விரு கம்பாக்கத்தில் தேமுதிக சார்பில் நடந்த தண்ணீர் பந்தல் திறப்பு விழாவுக்குப் பின்னர் செய்தி யாளர்களிடம் இக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா பேசினார். 

“மூன்றாவது அணி என்பது நிழல் போன்றது. மத்தியில் மூன் றாவது அணி ஆட்சி வெறும் கற்பனையே. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. சந்திரசேகர ராவ், ஸ்டாலின் சந்திப்பால் எந்த ஒரு பயனும் விளையாது.

“தேர்தல் முடிவு எப்படி இருக் கும் என்பதை அறிந்து ஏதோ திட்டம் போடுகின்றனர். அது பலிக்காது. மீண்டும் நரேந்திர மோடி பிரதமராவது உறுதி. தேசிய ஜனநாயக கூட்டணி நாடு முழுவதும் மட்டுமின்றி தமிழகத்திலும் மகத்தான வெற்றியைப் பெறும்,” என்று கூறியுள்ளார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon