விரைவில் உதயநிதிக்கு  பொறுப்பு கிடைக்க வாய்ப்பு 

சென்னை: தனது தந்தை வைத் திருந்த மதிப்புமிக்க திமுக இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு உதயநிதி ஸ்டாலினின் (படம்) கைக்கு வருவது கிட்டத் தட்ட உறுதியாகி வருகிறது. 

இதற்கு திருச்சி மாவட்ட திமுக பிள்ளையார் சுழி போட்டு ஆரம் பித்து வைத்துள்ளதாகவும் கூறப் படுகிறது. 

திமுக இளைஞர் அணியின் செயலாளர் பதவியில் இப்போது வெள்ளக்கோயில் சாமிநாதன் உள்ளார். இவர் முன்னாள் அமைச்சரும் ஆவார்.

ஆனால் கட்சிக்குள் சாமிநாதனின்  செயல்பாடுகள் அவ்வளவு வேகத்தில் திருப்தி கரமாக இல்லை என்று முணு முணுக்கப்பட்டது  இப்போது தீவிரமடைந்துள்ளது.

அந்தப் பொறுப்பை உதயநிதி ஸ்டாலினுக்குத் தரவேண்டும் என்று உதயநிதியின் ஆதர வாளர்கள் வற்புறுத்தி வருகின் றனர். இந்த விஷயங்கள் எல்லாம் சாமிநாதனுக்கும் தெரி விக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, அவர் தனது இளைஞர் அணி செயலாளர் பத வியை விட்டு விலகப் போவதாக வும் தனது பதவி விலகல் கடி தத்தை விரைவில் கொடுக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. 

மற்றொரு பக்கம், இளைஞர் அணி செயலாளராக உதயநிதி யைப் பொறுப்பேற்க வைக்க திமுக தலைமை அதற்கான வேலை களைக் கையில் எடுத்துள்ளது. 

ஒருவேளை சாமிநாதனின் பதவி விலகல் ஏற்கப்படும் சூழ் நிலையில், ஒருசில தினங்களி லேயே உதயநிதிக்குப் பொறுப்பு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

இந்த தகவல்களை எல்லாம் உறுதிப்படுத்தும் விதமாக திருச்சி யில் திமுக சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 

இதில் திமுக தொடர்ந்து தனது வெற்றிப் பயணத்தைத் தொடரவும் திமுக இளைஞர் அணியை ஊக்குவிக்கும் வகை யிலும் இளைஞர் அணி செயலா ளர் பதவியை உதயநிதிக்கு வழங்கவேண்டும் என்றும் திருச்சி மாவட்ட வடக்கு, தெற்குப் பகுதி திமுகவினர் ஒருமனதாக தீர் மானம் நிறைவேற்றியுள்ளனர். 

அண்மைய தேர்தல் பிரசாரத் தில் இளையர்களைக் கவர்ந் திழுத்தார் உதயநிதி. நடிகர் என்ற முறையிலும் கலைஞரின் பேரன் என்ற முறையிலும் உதயநிதியைப் பார்க்க ஒரு கூட்டம் திரண்டது. தேர்தலில் 37 தொகுதிகளில் திமுக வெற்றியும் பெற்றது.