ராகுலின் தோல்விக்குக் கூட்டணி கட்சிகளே காரணம்: காங்கிரஸ் பரபரப்புக் குற்றச்சாட்டு

அமேதி: நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறிய சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல் பட்டதால்தான் ராகுல் காந்திக்குத் தோல்வி ஏற்பட்டதாகக் காங்கிரஸ் விசாரணை குழு குற்றம்சாட்டி உள்ளது.

அமேதி தொகுதியில் கடந்த 39 ஆண்டுகளாக நேரு குடும்பத் தில் உள்ளவர்களைத் தவிர வேறு யாரும் வெற்றி பெற்றதில்லை.

ஆனால் நடந்து முடிந்த நாடா ளுமன்றத் தேர்தலில் 49.70% வாக்குகளைப் பெற்ற பாஜகவின் ஸ்மிருதியிடம் 43.90 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்று ராகுல் தோற்றார். இது கடந்த தேர்தலில் அவர் பெற்ற வாக்கு களைவிட 2.81% குறைவு.

இந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் சுபைர் கான், கே.எல்.சர்மா ஆகியோர் ராகுல் காந்தியின் தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.

அதைத்தொடர்ந்து, “அமேதி தொகுதியைப் பொறுத்தவரையில் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் காயத்திரி பிரஜாபதியின் மகன் அனில் பிரஜாபதி வெளிப்படையாகவே ஸ்மிருதி இரானிக்காக பணியாற்றி னார்.

“கவுரிகஞ்ச் சமாஜ்வாடி எம்எல்ஏ ஸ்மிருதி இரானிக்காக வாக்கு கேட்டு பிரச்சாரம் செய் தார். இதுமட்டுமின்றி பல பஞ் சாயத்து அமைப்புகளில் வெற்றி பெற்ற சமாஜ்வாடி பகுஜன் சமாஜ் கட்சியின் ராகுல் காந்திக்கு எதிராகப் பணியாற்றியுள்ளனர்.

“சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் வேட்பாளரை நிறுத்தாமல் ராகுலுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தனர். 

“ஆனால் அவர்கள் பாஜகவுக்கு ஆதரவாகப் பணியாற்றியுள்ளனர். திட்டமிட்டு ராகுல் காந்தியைத் தோற்கடிக்கச் செய்துள்ளனர்,” என அவர்கள் குற்றம்சாட்டினர்.