தன்னம்பிக்கை வளர்த்த ஓராண்டுக் கல்வி

யாஸ்மின் பேகம்

வழக்கநிலைத் தேர்வுகளில் சிறந்த தேர்ச்சி பெற்றாலும் சாதாரணநிலைத் தேர்வுகள் கடினமாக இருக்குமோ என்ற அச்சம் கஸ்தூரி திருநாவுக்கரசுக்கு எழுந்தது. அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்த அவருக்கு வரப்பிரசாதமாக அமைந்தது ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் 'பிஎஃப்பி' எனப்படும் ஓராண்டுக்கான அடிப்படைக் கல்வித் திட்டம். அதனை முடித்த பிறகு அதே பலதுறைத் தொழிற்கல்லூரியில் இவ்வாண்டு மனிதவள மேலாண்மைப் பட்டயக் கல்வியில் சேர்ந்தார் கஸ்தூரி. வழக்கநிலைக் கல்வி முடித்து, பின் பலதுறைத் தொழிற்கல்லூரியின் மூன்றாண்டு பட்டயக் கல்வியைத் தொடர்பவர்களுக்கு பாலமாக அமைகிறது பிஎஃப்பி திட்டம். இந்த ஓராண்டுக் காலத்தில் மாணவர்களுக்கு பலவித கல்வித் திறன்களில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தில் பயின்ற ஓராண்டுக் காலத்தில் தமது தன்னம்பிக்கை மேம்பட்டதாகக் கூறினார் கஸ்தூரி, 18. சக மாணவர்களுடன் இணைந்து திட்டப்பணிகளில் ஈடுபட்டதுடன் அவற்றைத் தன்னம்பிக்கையுடன் படைக்கவும் முடிந்தது என்றார் அவர். குழு நடவடிக்கைகளைத் திட்டமிட்டு மேற்கொண்ட கஸ்தூரி, 'புரொஜெக்ட் கார்னேஷன்' எனும் நிகழ்ச்சியை நடத்துவதிலும் பங்களித்தார். 'புரொஜெக்ட் கார்னேஷன்' திட்டத்தில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகளுடன் இணைந்து உடற்குறையுடையோர் தயாரித்த பொருட்களை விற்க உதவினர். இதன் மூலம் திரட்டப்பட்ட நிதி உடற்குறை உடையோர் அமைப்புக்கு வழங்கப்பட்டது. உடற்குறையுடையோர் பிறர் உதவியின்றி வாழலாம் என்ற விழிப்புணர்வையும் இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் ஏற்படுத்தினர். வழக்கநிலைத் தேர்வுகளில் 11 மதிப்பெண் களுக்குக் கீழ் பெறும் மாணவர்கள் 'பிஎஃப்பி' திட்டத்தில் சேரலாம். இது குறித்த மேல் விவரங்களுக்கு http://www.rp.edu.sg/PFP/Qualify.aspx இணையத்தளத்தை நாடலாம்.

ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட 'புரொஜெக்ட் கார்னேஷன்' நிகழ்ச்சியில் சக மாணவர்களுடன் பங்கேற்ற கஸ்தூரி (நடுவில் அமர்ந்திருப்பவர்). படம்: கஸ்தூரி திருநாவுக்கரசு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!