நாடகம்வழி சமூகச் சிந்தனையைத் தூண்டும் பூஜா

முவாமினா

சிறு வயதிலிருந்தே தன் உணர்ச்சிகளை நடிப்புவழி வெளிக்காட்டு வதில் பூஜா காசிவிஷ்வநாத் கைதேர்ந்தவர். ஆனால் இவர் இயல்பாகவே கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்தவர். 
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு பிறரோடு இயல்பாகப் பழக வேண்டும் என்ற நோக்கில் அவருடைய தாயார் அவரை சிங்கப்பூர் கலைப் பள்ளியில் சேர்த்தார். பூஜாவின் மேம்பாட் டுக்கு அது தகுந்த பாதை யாகவும் விளங்கியது.
‘அனைத்துலக பக்கலோரே’ கல்வி முறை பட்டயக் கல்வி முடிவுகள் கடந்த மாதம் வெளி வந்தபோது பூஜா மகிழ்ச்சியில் திளைத் தார். ஏனெனில், அதில் இவர் 43 புள் ளிகளுடன் சிறப் புத் தேர்ச்சி பெற்றிருந் தார். இந்தப் பாடத் திட்டத்தின் உச்சத் தேர்ச்சி 45 புள்ளிகளாகும்.
சிங்கப்பூர் கலைப் பள்ளியில் மேடை நாடகத் துறையில் பயின்ற 18 வயது பூஜா, சமூக விவகாரங்கள் தொடர்பில் விழிப் புணர்வை ஏற்படுத்த மேடை நாடகம் ஒரு சிறந்த தளம் என்று கருதுகிறார். விலங்குகளையும் சுற்றுப்புறத்தையும் பாதுகாப்பதில் இவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. ஒவ்வொரு வாரமும் விலங்கு காப்பகம் ஒன்றில் தொண்டூழியம் புரிவதோடு, அக் காப்பகத்திற்கு நிதி திரட்ட இவர் சுவரொட்டிகள், ஆடைகளில் தைக்கப்படும் பெயர் விவர அட் டைகள் போன்றவற்றை வடிவமைக் கிறார்.
சிங்கப்பூர் கலைப் பள்ளியின் முதல் இரண்டு ஆண்டுகளில் பூஜா நாடக உத்திகளைக் கற்றுக் கொண்டார். அவரது மூன்றாம் ஆண்டில், 'யம்மி மம்மிஸ்' எனும் ஆங்கில மேடை நாடகத்தைத் தன் நண்பர்களுடன் சுயமாகத் தயாரித்தார். இது பாடத்திட்டத்தில் இடம்பெறாத அவரது முதல் மேடை நாடக படைப்பாகும். அம்மா வேடத் தில் நடிப்பது மட்டும் அல்லாமல் கதை, இயக்கம், ஒப்பனை, மேடை வடிவமைப்பு போன்ற அம்சங் களிலும் அவரது பங்களிப்பு இருந் தது.
"ஒரு தாயாரின் சவால்களைப் பார்வையாளர்களுக்குத் தத்ரூப மாக வெளிக்காட்டினோம். இந்த நாடகத்தை எவருடைய உதவியும் இன்றி படைத்தது ஒரு புதுவித அனுபவம்," என்று பூஜா கூறினார். 
மேடை நாடகம் மக்களிடையே சமூகச் சிந்தனையைத் தூண்டுவதற்கான ஒரு சிறந்த தளம் என்று இவர் கருதுகிறார். 
எடுத்துக்காட்டாக பலாத்காரம் போன்ற விஷயங்களை நூதன முறையில் மக்களுக்கு எடுத்துச் சொல்ல மேடை நாடகம் உதவுகிறது. சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட இது ஒருவகையான உத்தி முறை என்று பூஜா நம்புகிறார். 
பட்டயக்கல்வி முடிந்த நிலையில் தற்போது புவியியல் துறையில் பயில விண்ணப்பித்திருக்கிறார்.
தொடர்ந்து மேடை நாடகங்களில் ஈடுபட்டுச் சமூகச் சிந்தனையைத் தூண்டக் கடப்பாடு கொண்டுள்ளார், இந்த துடிப்புமிக்க இளையர். 
பட்டப்படிப்பை முடித்த பிறகு, பூஜா அரசாங்க சார்பற்ற  அமைப்பில் அல்லது ஐக்கிய நாட்டுச் சபையில் பணிபுரியும் கனவுடன் உள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்

17 Jun 2019

ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்  கல்லூரி படைத்த நாட்டிய விழா

சிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி

17 Jun 2019

சமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு