திமுக, அதிமுக பிரமுகர்கள் வீட்டில் ரூ.3.5 கோடி பறிமுதல்

சென்னை: திமுக பிரமுகர் வீட்டில் இருந்து மூன்று கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் சென்னை திமுகவினர் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது. இதேபோல் சென்னை அதிமுக பிரமுகரிடம் இருந்து 50 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு தீவிரமடைந்துள் ளது. குறிப்பாக முறைகேடான பணப் பட்டுவாடாவைத் தடுக்கும் வகையில் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் முறையான ஆவணங்கள் இன்றி பதுக்கப்பட்ட, வாகனங்களில் எடுத்துச்செல்லப் பட்ட ரொக்கப் பணம், நகைகள், விலையுயர்ந்த பொருட்கள் ஆகி யன பறிமுதல் செய்யப்படுகின்றன.

நேற்று முன்தினம் சென்னை, சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரின் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது உரிய கணக்குகள், ஆவணங்கள் இன்றி 3 கோடி ரூபாய் ரொக்கப் பணம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அத் தொகையை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அரசுக் கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதேபோல் சென்னையிலுள்ள மடிப்பாக்கம் பகுதியில் அதிமுக பிரமுகரான 169வது வார்டு மாநக ராட்சி கவுன்சிலர் ஜெயச்சந்திரன் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி களுக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று சோத னையிட்டபோது, ரூ.50 லட்சம் ரொக்கம் சிக்கியது. தேர்தல் பறக் கும் படையினரால் தமிழகம் முழு வதும் இதுவரை 90 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.