காரைக்கால்- நாகை இடையே கரையைக் கடக்கிறது புதிய புயல்

சென்னை: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறியதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இப்புதிய புயலானது காரைக்கால், நாகப்பட்டினம் இடையே இன்று எந்நேரத்திலும் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. "தற்போது இலங்கை, அதையொட்டிய மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இப்புயல் நிலை கொண்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது," என சென்னை வானிலை ஆய்வு மையம் மேலும் கூறியுள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் சென்னையில் பலத்த மழை பெய்தது. இதனால் கோடையிலும் மாநகர சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கிக் கிடந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!