பத்தாம் வகுப்பு மாணவி கடத்தல்

பூந்தமல்லி: சென்னை அருகே பூந்தமல்லியை அடுத்த மேட்டுத் தாங்கலைச் சேர்ந்தவர் ராஜ் குமார். சாயமடிக்கும் தொழில் புரியும் இவர் அப்பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறி, கடத்திச் சென்றார். இது குறித்து மாணவியின் தாய் திருவள்ளூர் அனைத்து மகளிர் போலிஸ் நிலையத்தில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலிசார், ‘மைனர்’ பெண்ணைக் கடத்தியதாக ராஜ்குமாரை கைது செய்து மாணவியை மீட்டனர்.