மரக்கன்றுகள் விநியோகிக்கும் ஓட்டுநர்

விழுப்புரம் மாவட்டம் சங்கீத மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர், அரசுப் பேருந்து ஓட்டுநர் கருணாநிதி. இயற்கையின் மீதும், மரங்கள் மீதும் மிகுந்த பற்று கொண்ட இவரை ‘மரம் கருணாநிதி’ என்றே அழைக்கிறார்கள். பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட தினங்களில் தனது சொந்த செலவில் ஆயிரம் மரக் கன்றுகளை வாங்கி, தம்மை வாழ்த்த வருபவர்களுக்கு வழங்குகிறார். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நேற்று முன்தினமும் 2 ஆயிரம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினார் இவர். இதுவரை சுமார் 7 லட்சம் மரக்கன்றுகளை வழங்கியுள்ளதாகக் கூறும் கருணாநிதி, தனது வாழ்நாளில் 100 கோடி மரக்கன்றுகளை வழங்குவதே லட்சியம் என்கிறார். படம்: தகவல் ஊடகம்