பொது இடத்தில் புகை பிடித்தால் வழக்கு: உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: பொது இடங்களில் புகைபிடிப்பவர்கள் மீது இனி வழக்குப்பதிவு செய்யப்படும். இதற்கான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த சரத் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், பொது இடங்களில் புகைபிடிப்ப வர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதுடன், அது தொடர்பான அறிக்கையை வரும் 20ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதிரடி உத்த ரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

சென்னையில் தாம் வசித்து வரும் பகுதியில் உள்ள தேநீர் கடையில், விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே புகைபிடிப்பவர்களை ஊக்குவிப்ப தாகவும் அளவுக்கு அதிகமான புகையால் தமது குடும்பத்தார் மட்டுமன்றி பொதுமக்களும் பாதிப்புக்குள்ளாவதாகவும் சரத் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பொது இடங்களில் புகைபிடிக்கக் கூடாது என சட்டம் இருந்தும் அதை அதிகாரிகள் சரியாக அமல்படுத்துவதில்லை என குற்றம்சாட்டியுள்ள அவர், சட்டத்தை முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் தமது மனுவில் கோரிக்கை விடுத் துள்ளார். இம்மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், கல்வி நிலையங்க ளில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்கக் கூடாது என சட்டமே உள்ளது என்றும், அதை மீறி பள்ளி செல்லும் சிறுவர்களுக்குக்கூட சிகரெட் எளிதாக கிடைக்கிறது என்றும் கவலை தெரிவித்தார்.

"எனவே கலையரங்குகள், மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், கல்வி நிலையங்கள், நூலகங்கள், நீதிமன்ற வளாகங்கள், பொது அலுவலகங்கள், ரயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் புகையிலைப் பொருட் கள் விற்பவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். "இந்த விஷயத்தில் சுகாதாரத்துறை அமைச்சகமும், காவல்துறை தலைவரும், சிறப்பு பறக்கும் படைகளை அமைத்து திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன் புகையிலை குறித்த சட்டவிதிமுறைகளை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து அந்த அறிக்கையை ஜூன் 20ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்," என்று நீதிபதி கிருபாகரன் தமது உத்தரவில் கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!