சுஷ்மா சுவராஜ்: 39 இந்தியர்களும் உயிருடன்உள்ளனர்

புதுடெல்லி: ஐஎஸ்ஐஎஸ் தீவிர வாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள 39 இந்தியர் களும் உயிருடன் பத்திரமாக உள்ளனர் என்று மத்திய வெளி யுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ம்ஆண்டு ஜூன் மாதம் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் 39 இந்தியர்களை ஈராக்கில் உள்ள மோசூல் நகரில் இருந்து பிணைக்கைதிகளாக பிடித்தனர். அவர்கள் தீவிரவாதிகளின் பிடி யில் கடந்த ஒன்றரை ஆண்டு களாக சிரமப்பட்டு வருகிறார்கள். அவர்களை விடுவிக்க இந்திய அரசு அனைத்துவித முயற்சி களிலும் ஈடுபட்டுள்ளது.
இதனிடையே, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த 39 இந்தியர்களும் கொல் லப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் பிணைக் கைதி களாக பிடித்து வைத்துள்ள 39 இந்தியர்கள் உயிருடன் பத்திரமாக உள்ளனர் என்று சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:-
“39 இந்தியர்களும் உயிருடன் இருக்கிறார்கள் என்று சொல்லும் போது, அவர்களை மீட்க தனிப்பட்ட முறையில் அதிக பொறுப்பு எடுத்திருக்கிறேன்.
“எங்களால் முடிந்த வரை முயற்சி செய்து வருகிறோம். இந்த முயற்சி தொடர்ந்தால், விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நினைக் கிறேன். அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
“தவறான வாக்குறுதியை நான் அளிக்கவில்லை. அவர்கள் கொல் லப்பட்டுவிட்டார்கள் என்பதை நான் உறுதி செய்துவிட்டால், அவர்களது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரியிருப்பேன்,” என்று அவர் கூறினார்.