பிளஸ் 2 தேர்வில் முறைகேடு: முதலிடம் பிடித்த மாணவி கைது

பாட்னா: பீகாரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில், கலைத் துறை பாடப்பிரிவில் 500-க்கு 444 மதிப்பெண் பெற்று ரூபி ராய் என்ற மாணவி முதலிடம் பெற்றது மோசடி என தெரிய வந்ததைத் தொடர்ந்து சனிக்கிழமை கைது செய்யப்பட்டு, 14 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப் பட்டார். இந்நிலையில், இந்தத் தேர்வு முறைகேட்டு விவகாரத்தில் ஈடுபட்டதாக பீகார் பள்ளித் தேர்வு வாரிய முன்னாள் செயலாளர் ஹரிகர் நாத் ஜா நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹரிகர் நாத் ஜா-வையும் சேர்த்து இந்த முறைகேடு தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண் ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது. பீகார் பள்ளித் தேர்வு வாரிய முன்னாள் தலைவர் லால்கேஸ்வர் சிங், அவரது மனைவி, முன்னாள் ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ ஒருவர் உள்ளிட்டோர் இந்த வழக் கின் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூபிராய் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் ரூபி ராய் உள்பட முறைகேட்டில் ஈடுபட்ட நான்கு மாணவர்களுக்கு எதிராக பாட்னா சிவில் நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத கைதாணை பிறப்பித்திருப்பதாக வும் போலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார். விசாரணை மேற்கொண்ட போலிசாரிடம் பேசிய ரூபி ராய், “ஒரு சராசரி மாணவி யாகத் தேர்வில் தேர்ச்சி பெறும் அளவில் மதிப்பெண் களைப் பெற்றாலே போதும் என்று தான் எண்ணி னேன். நான் ஒரு கிராமத்து மாணவி. எனக்கு மாநில அளவில் முதலிடம் பிடிக்கவேண்டும் என்ற எண்ணம் எல்லாம் துளியும் இல்லை,” என்று தெரிவித்துள்ளார்.

சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவி ரூபி ராய். படம்: ஊடகம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மூன்று மாதக் குழந்தையின் பெற்றோரான மாவீரன், கவுசல்யாவிடம் மீட்கப்பட்ட குழந்தையை போலிசார் ஒப்படைக்கின்றனர். படம்: ஊடகம்

20 Mar 2019

கடத்தப்பட்ட குழந்தை 24 மணிநேரத்தில் மீட்பு; பெண் கைது