உள்ளாட்சித் தேர்தல்: தேமுதிக தயவை நாடும் திமுக

தேமுதிகவுக்குப் பாதிப்பை ஏற் படுத்தும் எந்த ஒரு செயலிலும் ஈடுபட வேண்டாம் எனத் திமுக தலைவர் கருணாநிதி தமது கட்சி யினருக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் விஜயகாந்தின் ஆதரவு திமுகவுக்குத் தேவைப்படலாம் என்ற ஊகத்தில் அந்த உத்தரவை அவர் பிறப்பித்து இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கடந்த 2006 ஆம் ஆண்டு உதயமான தேமுதிக அடுத்து நடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, 10 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றது.

பின்னர் 2011ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு எட்டு விழுக்காட்டு வாக்குளைப் பெற்ற தோடு எதிர்க்கட்சி அந்தஸ் துக்கும் அது உயர்ந்தது. இப்படி வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டு இருந்த தேமுதிகவுக்கு 2014ஆம் ஆண்டு சரிவு தொடங்கியது. அந்த ஆண்டு நடந்த நாடாளு மன்றத் தேர்தலில் பாஜக கூட் டணியில் இடம் பெற்று வெறும் ஐந்து விழுக்காட்டு வாக்குகளை மட்டுமே அக்கட்சி பெற்றது. தொடர்ந்து, கடந்த மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து 2.4 விழுக்காட்டு வாக்குளை வாங்கி அடிமட்டத் திற்கு அக்கட்சி சென்றது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி இருக்க அக்கட்சி முடிவு எடுத்து உள்ளது. தனித்துப் போட்டியிட்டு மேலும் அவமானப்பட விரும்ப வில்லை என அக்கட்சி கருது கிறது. கூட்டணி அமைத்துப் போட்டி யிட உள்ளது திமுக. அந்தக் கூட்டணியில் காங்கிரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் போன்றவை இடம் பெறும். போட்டியிலிருந்து தேமுதிக ஒதுங்கிக்கொண்டால் அதன் ஆதரவு திமுகவுக்குக் கிட்டக் கூடும் எனத் திமுக தலைமை கணக்குப் போடுகிறது. ஒரு வேளை போட்டியிட்டாலும் மாநி லம் முழுவதும் தேமுதிக போட் டியிடும் நிலைமை ஏற்படாது. அக்கட்சியால் போட்டியிட இயலாத இடங்களில் திமுகவுக்கு ஆதரவளிக்கக்கூடும் எனவும் இரண்டு விழுக்காடு வாக்கு களாக இருந்தாலும் திமுகவின் வெற்றிக்குக் கைகொடுக்க அவை உதவும் என்பதும் கருணாநிதி யின் நினைப்பு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!