ரயில்வேயை மேம்படுத்த 20,000 பேரிடம் மோடி ஆலோசனை

புதுடெல்லி: ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இந்தியாவில் அறி­முகம் செய்யப்பட்ட ரயில்வே துறை, பெரிய மாற்றங்கள் ஏது­மின்றி தொடங்கப்பட்ட நிலையி­லேயே தொடர்கிறது.
இந்நிலையில் அத்துறையையும் ரயில் போக்குவரத்தையும் மேம்­படுத்­தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி 20,000 பேரிடம் காணொளி வழியாகப் பேசத் திட்டமிட்டுள்ளார். அவர்களில் சிறந்த ஆலோசனைகள் வழங்கும் 400 பேரிடம் நேரடியாகச் சந்தித்து உரையாடவிருக்கிறார். இத்துடன் ரயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களின் ஆலோ­சனை களைப் பெறவும் முடிவு செய்யப் பட்டுள்ளது.
ரயில்வே துறையை மேம்­படுத்தும் வகையிலான ஆலோ­ச னை­களைப் பெறுவதற்கு முதல் கட்டமாக www.railvikasshivr.com என்னும் இணையத் தளம் வாயிலாக ஆலோசனைகள் பெறப்படுகின்றன.
மேலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 011= 47844888 என்ற தொலைபேசி எண்ணிலும் ஆலோசனை அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் சிறந்த ஆலோசனை அளிக்கும் 400 பேர் தேர்ந்­தெடுக்கப்பட்டு பிரதமரை நேரடியாகச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் 25 முதல் 27ஆம் தேதி வரை நடைபெறும் இந்தச் சந்திப்பில் இவர்களின் ஆலோசனைகளை பிரதமர் மோடி விரிவாகக் கேட்க இருக்கிறார்.
இதுமட்டுமின்றி, அதே நாட்களில் பிரதமர் மோடி, சுமார் 20,000 பேருடன் காணொளிக் காட்சி முறையில் ஆலோசனை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்