ஜெயாவைச் சுற்றும் ‘நிழலை’ அகற்ற பாஜக மேலிடம் தீவிரம்

மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வாய்ப்பைப் பயன் படுத்தி சசிகலாவை அவரிடமி ருந்து பிரிக்கும் வேலையில் பிரதமர் மோடியும் பாரதிய ஜன தா கட்சியும் தீவிரமாக இறங்கி இருப்பதாக ‘விகடன்’ வார ஏடு தெரிவித்துள்ளது. முதல்வர் என்கிற முறையில் ஜெயலலிதாவை மத்திய அரசின் அதிகாரிகளோ பாஜக பிரமுகர் களோ நெருங்க முடியாத அள வுக்கு முதல்வரின் நிழலாக சசி கலா இருப்பது டெல்லி வட்டாரத் துக்கு எரிச்சலைத் தருகிறது. சில மாதங்களுக்கு முன்பு உளவுத் துறையின் தமிழகத் தலைவராக வர்மா என்பவர் நிய மிக்கப்பட்டார். ஆனால் பிரபல அரசியல் தலைவர்களைத் தொடர்புகொள்வதுபோல அவ ரால் ஜெயலலிதாவை எளிதில் நெருங்க முடியவில்லை. அதனைத் தொடர்ந்து, “முதல் வரின் இல்லம் முழுக்க முழுக்க சசிகலாவின் பிடியில் உள்ளது. அரசு நிர்வாகத்தில் மறைமுக மாக அவரும் அவரது குடும்பத் தினரும் தலையிடுகிறார்கள்,” என்று மத்திய அரசுக்கு உளவுத் துறை அறிக்கை அனுப்பியது.

தற்போது ஜெயலலிதா உடல் நிலை விவரமும் சசிகலாவால் ரகசியமாகக் கையாளப்படுவதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா புகைச்சலைக் கிளப்பியதும் டெல்லி மேலிட அரசியல்வாதிகளின் ஏற்பாடுதா னாம். அதனைத் தொடர்ந்து அப் போலா மருத்துவமனையை உள வுத்துறை சுற்ற ஆரம்பித்தது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை யில் இருந்து இரு மருத்துவர்கள் அப்போலாவுக்கு வந்தது ஊர றிந்தது. ஆனால், கைதேர்ந்த உளவு நிபுணர்கள் ஆறு பேரும் அந்த மருத்துவர்களோடு வந்து அப்போலோவை நோட்டமிட்ட தாக வார ஏடு குறிப்பிடுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

காலக்கெடுவுக்குள் ஆட்சி அமைக்க இயலாததால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மகாராஷ்டிர ஆளுநர் கோஷியாரி பரிந்துரைத்தார். படம்: ஊடகம்

12 Nov 2019

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி

கழுத்தில் மாலையுடன் இருக்க வேண்டிய மணமக்கள் இருவரும் துப்பாக்கிகளுடன் இருந்தது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களைப் பீதிக்குள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது. படம்: ஊடகம்

12 Nov 2019

இயந்திரத் துப்பாக்கி ஏந்தி வந்த மணமக்கள்

ஓவியர் பிரணவைச் சந்தித்த முதல்வர் பினராயி, ஓவியரின் கால்களைப் பிடித்து 'கைகுலுக்கிப்' பாராட்டினார். படங்கள்: டுவிட்டர்

12 Nov 2019

கைகளின்றி 'கைகொடுத்த' ஓவியர்