125 வயது வேப்பமரத்துக்குப் புத்துணர்ச்சியூட்டும் சிகிச்சை

கேரளாவின் தொடுபுழா நகரில் உள்ள ஒரு ஆயுர்வேத மருத்து வரின் வீட்டின் மேல் சாய்ந்து கிடக்கும் 125 வயது வேப்ப மரத்துக்குப் புத்துணர்ச்சியூட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. வயதின் காரணமாக அந்த மரம் வாடத் தொடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பல ஆண்டுகளாக அந்த ஆயுர்வேத மருத்துவரின் வீட்டிற்கு மிக அருகில் கம்பீரமாகத் தோற்ற மளித்து வந்த மரம் தற்போது சாய்ந்து காணப்படுகிறது.

மரத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர அதற்கு 'விருக்ஷாயுர்வேத' சிகிச்சை அளிக்கப்படுவதாக மரத்துக்குச் சிகிச்சை அளித்து வரும் ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் என். சதீஷ்குமாரின் குடும்பத்தார் டெக்கன் கிரானிக்கல் நாளி தழிடம் தெரிவித்தனர். இந்தச் சிகிச்சை அடுத்த ஆறு மாதங்களுக்கு அளிக்கப்படும் என்று அறியப்படுகிறது. ஒவ்வாமை காரணமாக அந்த வேப்பமரம் வாட ஆரம்பித்திருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து அதைக் காப்பாற்ற நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது.

ஒவ்வாமை காரணமாக வாடி வரும் 125 வயது வேப்பமரத்தைக் காப்பாற்றும் வகையில் அதற்கு சிகிச்சை அளித்து வரும் ஆயுர்வேத மருத்துவர்கள். படம்: டெக்கன் கிரானிக்கல் நாளிதழ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!