அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்குவது எளிது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ

புதுடெல்லி: ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கி தமிழக அரசு அவசரச் சட்டம் நேற்று முன்தினம் பிறப்பித்தது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ "தமிழர்கள் பயப்படவேண்டியது இல்லை. அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்குவது எளிது," என்று கூறியுள்ளார். ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு உச்ச நீதிமன்றம் விதித்திருந்த தடை தொடர்ந்து 3 ஆண்டாக இந்த ஆண்டும் நீடித்தது. ஆனால் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்திய தீர வேண்டும் என்ற தீர்மானத்துடன் இளைஞர்கள், மாணவர்கள் தன் எழுச்சியாக மாநிலம் முழுவதும் கடந்த 6 நாட்களாக அறவழிப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதையடுத்து மாநில அரசு அவசர அவசரமாக மத்திய அரசுடன் பேசி அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. நேற்று முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த முடிவு செய்தது. ஆனால் மக்கள் எதிர்ப்புத்தெரிவித்ததால் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. "அவசர சட்டத்தையெல்லாம் நம்பி நாங்கள் போராட்டத்தைக் கைவிட மாட்டோம். ஜல்லிக்கட்டை நடத்தவும் விடமாட்டோம்," என்று அலங்காநல்லூர் உள்ளிட்ட அனைத்து ஊர்ப் பொதுமக்களும் ஒரு சேர கூறிவிட்டனர். இந்நிலையில் முதல்வர் பன்னீர்செல்வமோ "அவசர சட்டத்தைச் சட்டமன்றத்தில் இன்று 23ஆம் தேதி நிரந்தரச் சட்டமாக மாற்றும் வகையில் ஒரு வரைவை தாக்கல் செய்வோம்," என்று கூறியுள்ளார். இதைப் பெரும் பான்மை மக்கள் நம்பவில்லை. சட்டம் குறித்த தெளிவு சாமானியர்களுக்கு இல்லை என்பதால் குழப்பம் நிலவி வருகிறது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தொடர்ந்து தமிழக மக்களுக்கு ஆலோசகராகவும் ஆதரவாகவும் இருந்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தமிழக மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவர் தன்னுடைய டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், "ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அவசரச் சட்டம் பிறப்பித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். "தற்போது கொண்டுவரப்பட் டுள்ள அவசரச் சட்டத்தைப் சட்டப் பேரவையில் சட்ட முன்வடிவாக அறிமுகம் செய்து நிறைவேற்ற வேண்டும். அதன்பின் நிரந்தர சட்டமாகும். அதனால் தமிழர்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை. "தமிழகத்தில் உள்ள பல இளைஞர்கள் என்னை ஜல்லிக் கட்டு பார்க்க வரச்சொல்லி முகநால், டுவிட்டரில் அழைப்புகள் விடுக்கிறார்கள்.

"எனக்குத் தமிழ்நாட்டிற்கு வந்து ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்க்க விருப்பம்தான். ஆனால் என் மனைவி உடல்நலக்குறை வால் அவதிப்பட்டு வருகிறார். ஆதலால் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்க்க என்னால் வரமுடியாது. மன்னித்துக் கொள்ளுங்கள் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற தமிழக மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றியைக் கொண்டாடுங்கள். அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்குவது எளிது. அதனால் பயப்படாமல் நிம்மதியாக இருங்கள்," என்று தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!