ராகுல், அகிலேஷ்: நாங்கள் இருவரும் சைக்கிள் சக்கரங்கள்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆளும் சமாஜ்வாடி கட்சியும் இந்தியாவின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதையொட்டி சமாஜ்வாடி கட்சியின் மாநில முதல்வர் அகி லேஷ் யாதவும் காங்கிரஸ் கட்சி யின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இருவரும் லக்னோவில் கூட் டாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது பேசிய அகிலேஷ் யாதவ், 'சைக்கிள்' உடன் 'கை' இணைந்துள்ளது. இதனால் சைக் கிளின் வேகம் கூடியிருக்கிறது. நானும் ராகுலும் சைக்கிளின் இரு சக்கரங்கள் என்று கூறினார். சமாஜ்வாடி கட்சியின் சின்னம் 'சைக்கிள்'. காங்கிரஸ் கட்சியின் சின்னம் 'கை' என்பது குறிப்பிடத் தக்கது. சட்டமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் 300 இடங்களில் வெற்றி பெறும் என்றும் அகிலேஷ் நம்பிக்கை தெரிவித்தார்.

நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று அகிலே‌ஷும் ராகுலும் கூறியுள்ளனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!