எட்டு மாதங்களில் தமிழகத்தின் கடன் `61,935 கோடி உயர்வு

தமிழக நிதியமைச்சர் டி.ஜெயக் குமார் 2017-18 நிதியாண்டிற் கான வரவுசெலவுத் திட்டத்தைச் சட்டமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், தமிழகத் தின் தற்போதைய கடன் சுமை 314,366 கோடி ரூபாயாக (S$67 பில்லியன்) அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் 2016- 17ஆம் ஆண்டிற்கான திருத்திய வரவுசெலவுத் திட்டத்தை அப்போ தைய நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தபோது தமிழகத்தின் கடன் நிலவரம் ரூ.252,431 கோடியாக இருந்தது. இந்நிலையில் அடுத்த எட்டு மாதங்களில் அது மேலும் 61,935 கோடி ரூபாய் கூடியிருக்கிறது. இருந்தபோதும் இந்த நிதி ஆண்டில் மேலும் 41,925 கோடி ரூபாய் கடன் வாங்கத் திட்டமிடப் பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!