உயிருக்கு ஆபத்து: மதுசூதனன் புகார் மனு

புதுடெல்லி: தம்மைக் கொலை செய்ய சதி நடப்பதாக ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக அணியின் ஆர்கே நகர் தொகுதி வேட்பாளர் மதுசூதனன் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். பலர் தம்மை நண்பர்கள் மூலம் தொடர்புகொண்டு கொலை மிரட்டல் விடுத்து இருப்பதாகவும் தம்மைக் கொலை செய்வதன் மூலம் இடைத்தேர்தலை தள்ளிப் போட சதி நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் தமக்கு உச்ச பட்ச பாதுகாப்பு அளிக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்குக்கு கடிதம் எழுதி உள்ளார். சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மது சூதனன் அளித்த புகார் மனுவில், அதிமுகவையும் ஆட்சியையும் சசி கலா குடும்பத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அறப்போராட்டம் நடத்தி வருவ தாகக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!