‘மக்கள் பாதை’ அமைப்பிற்கு வரவேற்பு

புதுக்கோட்டை: ஐஏஎஸ் அதிகாரி சகாயம் ஆலோசனையில் செயல் பட்டு வரும் 'மக்கள் பாதை' எனும் அமைப்பில் ஏராளமான இளை யர்கள் தங்களை இணைத்துக் கொண்டு, மக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 'லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்' என முழங்கிவரும் ஐஏஎஸ் அதி காரி சகாயம் அரசியலில் ஈடுபட வேண் டும் எனத் தமிழகமெங்கும் இளையர்கள் வேண்டுகோள் விடுத் த னர். இது தொடர்பாக சமூக வலைத் தளங்களிலும் தங் களது விருப்பத் தைப் பதிவு செய் தனர். இது குறித் து திருச்சி, மதுரை இளையர்கள் சார்பில் சென்னையில் கலந்தாய்வுக் கூட் டம் ஒன்று நடைபெற்றது.

அப்போது, "சமூகத்தினுடைய ஓர் அங்கம்தான் அரசியல். எனவே, அரசியலில் நேர்மையைக் கொண்டுவர எண்ணக்கூடியவர் கள் தொடங்கவேண்டிய இடம் சமூகம்தானே தவிர, அரசியல் அல்ல. எனவே, அரசியலைத் தாண்டி, இந்தச் சமூகத்தை நோக்கி நாம் செல்லவேண்டும் என எண்ணுகிறேன்," என்று இளையர்களின் கேள்விக்கு சகாயம் பதிலளித்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளுக்குப் பின், 'மக்கள் பாதை' என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் சமூக ஆர்வலர்கள், இளைஞர் களைக் கொண்டு கட்டமைக்கப் பட்டு வருகிறது. இதன்மூலம் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதுக்கோட்டையில் உள்ள புதுக்குளத்தில் 3 டன் எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய 'மக்கள் பாதை' இயக்கத்தைச் சேர்ந்த இளையர்கள். படம்: தி இந்து

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!