சுடச் சுடச் செய்திகள்

சிறுமி சீரழித்து கொல்லப்பட்ட வழக்கு: 10ஆம் தேதி தீர்ப்பு

ஸ்ரீநகர்: பழங்குடியின சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தது தொடர்பான வழக்கில் வரும் 10ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது.

காஷ்மீரின் கதுவா மாவட்டத் தில் உள்ள ரசானா கிராமத்தில் பழங்குடியினச் சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார். இக்கொடூரச் சம்பவம் நாடு முழு வதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக ரசானா கிராமத்தின் தலைவர், அவரது மகன், மூன்று போலிசார் உள் ளிட்ட எட்டு பேர் கைதாகினர்.

அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டபவர்களுக்கு ஆதர வாக பேரணி ஒன்று நடைபெற்றது. இதில் காஷ்மீர் அரசில் அங்கம் வகித்த பாஜக அமைச்சர்கள் இருவர் பங்கேற்றனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இருவரும் பதவி விலக நேர்ந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு கதுவா மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஆனால் அங்கு விசாரணை உரிய முறையில் நடக்காது என்று குறிப்பிட்டு, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசார ணையை பதான்கோட் நீதிமன்றத் துக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம். சுமார் ஓராண்டு காலமாக நடை பெற்று வந்த வழக்கு விசாரணை இருதரப்பு வாதங்களுக்குப் பின் னர் தற்போது முடிவுக்கு வந் துள்ளது.

இதையடுத்து எதிர்வரும் 10ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒட்டுமொத்த நாடும் இத் தீர்ப்புக்காக காத்திருக்கிறது. 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon