ஆங்கிலத்தில் பேச அரசு பள்ளி மாணவர்களுக்கு குறுவட்டு

கோபி: கோபியில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக அரசு சார்பில் 15 லட்சத்து 75 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. 

“வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு விரைவில் ரூ.2,000 வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு இலவச காலணி வழங்கப்படும். க்யூ.ஆர். குறியீடு மூலம் பாடங்களை மாணவர்கள் படிக்கும் திட்டம் இந்தியாவிலேயே முதன்முதலாக துவங்கப்பட்டுள்ளது.  பாடங்களை கற்றுத்தருவதற்காக ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச 2,000 வார்த்தைகள் கொண்ட குறுவட்டு (சிடி) தயாரிக்கப்பட்டு வருகிறது. அது விரைவில் வழங்கப்படும்,” என்றார் செங்கோட்டையன்.

Loading...
Load next