இஸ்ரோ: ‘ஹலோ லேண்டர்’

புதுடெல்லி: நிலவின் மேற்புரத்தில் கிடக்கும் விக்ரம் லேண்டரிடமிருந்து தகவல் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அதனுடன் தொடர்புகொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு நாசாவும் துணையாக இருந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக விக்ரம் லேண்டருக்கு நேற்று ‘ஹலோ’ எனும் தகவலை  நாசா அனுப்பியுள்ளது. இதற்கு ஓரிரு நாட்களில் பதில் கிடைக்கும் என்று நாசா நம்புகிறது.