‘சிவசேனா கூட்டணியில் பிளவு இல்லை’

மும்பை: காங்கிரசுடன் ஆன சிவசேனா கூட்டணியில் பிளவு என பாரதிய ஜனதா கூறுவதை நம்பாதீர்கள் என்று சிவசேனா கட்சியின் தலைவரும் மகாரா‌ஷ்டிர மாநிலத்தின் முதல்வருமான உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். நாங்கள் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் காங்கிரஸ் தலைமையுடன் தொடர்ந்து நல்ல உறவில் இருந்து வருகிறோம். இந்தக் கூட்டணியில் எவ்விதக் கருத்துவேறுபாடும் இல்லை என்று அவர் கூறினார்.