ரூ.2,000 நோட்டு புழக்கத்தைக் குறைக்க நடவடிக்கை

புதுடெல்லி: இந்தியாவின் பல்வேறு பொதுத்துறை வங்கிகளும் திடீரென 2,000 ரூபாய் நோட்டுகளைக் குறைத்துக்கொண்டு அதிக அளவில் 500 ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்யத் தொடங்கியுள்ளன.  2,000 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அச்சடிப்பது குறைந்துள்ள நிலையில், பொதுமக்களிடையே ரூபாய் நோட்டு புழக்கம் குறைந்துவிட்டது. 

இந்நிலையில், இது பற்றி விளக்கம் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த விவகாரத்தில் தனக்குத் தெரிந்தவரை, வங்கிகளுக்கு எந்தவோர் அறிவுரையும் வழங்கப்படவில்லை எனக் கூறினார்.