மேலப்பாளையம் பகுதி தனிமைப்படுத்தப்பட்டது; 16 பேருக்கு கிருமித்தொற்று

மேலப்பாளையம் பகுதி தனிமைப்படுத்தப்பட்டது; 16 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
3f326a93-c6b5-441b-8110-db7ced32883e
மேலப்பாளையம் பகுதியைத் தனிமைப்படுத்த மாவட்ட ஆட்சியர் ஷில்பா உத்தரவிட்டார். படம்: தகவல் ஊடகம் -

தமிழகத்தின் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதி ஒட்டுமொத்தமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது இப்பகுதி காவல்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலப்பாளையத்தைச் சேர்ந்த பலர் டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்றது தெரியவந்ததையடுத்து அவர்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 16 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மேலப்பாளையம் பகுதியைத் தனிமைப்படுத்த மாவட்ட ஆட்சியர் ஷில்பா உத்தரவிட்டார்.

மேலப்பாளையம் செல்லும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுள்ளன.

அங்கு போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் அறவே இல்லை.

அங்கு சந்தேக நபர்களுக்கு தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை நடந்து வருகிறது.

#தமிழ்நாடு #மேலப்பாளையம் #கொவிட்-19

குறிப்புச் சொற்கள்