இந்தியாவில் முடக்கநிலை நீட்டிக்கப்படக்கூடும்

புது­டெல்லி: இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி அனைத்து மாநில முதல்­வர்­க­ளு­டன் நேற்று காணொளி அழைப்பு மூலம் கிட்­டத்­தட்ட நான்கு மணி நேரத்­துக்­குக் கூட்­டம் நடத்­தி­னார்.

கொரோனா கிரு­மித்­தொற்றை முறி­ய­டிக்க நடப்­பில் உள்ள முடக்­க­நிலை மேலும் இரண்டு வாரங்­க­ளுக்கு நீட்­டிக்­கப்­ப­டக்­கூ­டும் என்று கலந்­து­ரை­யா­ட­லுக்­குப் பின் பிர­த­மர் மோடி தெரி­வித்­தார்.

கலந்­து­ரை­யா­ட­லின்­போது பெரும்­பா­லான மாநி­லங்­க­ளின் முதல்­வர்­கள் முடக்­க­நி­லையை நீட்­டிக்க வேண்­டும் என வலி­யு­றுத்­தி­ய­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

டெல்லி, பஞ்­சாப், மத்­திய பிர­தே­சம் உட்­பட பல மாநி­லங்­க­ளின் முதல்­வர்­களும் முடக்­க­நி­லையை நீட்­டிக்க வேண்­டும் என்­றும் நாடு­த­ழு­விய முடக்­க­நிலை மூலம் மட்­டுமே கொரோ­னாவை கட்­டுப்­ப­டுத்த முடி­யும் என்­றும் தெரி­வித்­த­தாக தக­வல் வெளி யாகி­யுள்­ளது.

பெரும்­பா­லான மாநில முதல்­வர்­க­ளின் பரிந்­து­ரையை ஏற்று ஏப்­ரல் 30ஆம் தேதி வரை முடக்­க­நிலை உத்­த­ரவை நீட்­டிக்க மத்­திய அரசு முடி­வெ­டுக்­கக்­கூ­டும் என்­றும் விரை­வில் அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு வெளி­யா­க­லாம் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இது குறித்து கர்­நா­டக முதல்­வர் எடி­யூ­ரப்பா கருத்து தெரி­வித்­தார்.

“முடக்­க­நிலை விஷ­யத்­தில் எந்த சம­ர­ச­மும் கிடை­யாது என எங்­க­ளி­டம் பிர­த­மர் மோடி கூறி­னார். மேலும் 15 நாட்­க­ளுக்கு முடக்­க­நிலை உத்­த­ரவை நீட்­டிக்க வேண்­டும் என பரிந்­து­ரை­கள் வந்­துள்­ள­தா­க­வும் அவர் கூறி­னார்.

“எனவே 15 நாட்­க­ளுக்கு ஊர­டங்கு உத்­த­ரவை நீட்­டிப்­பது தொடர்­பாக அடுத்த ஓரிரு நாட்­களில் மத்­திய அரசு அறி­விப்பை வெளி­யி­டும் என­வும் எங்­க­ளி­டம் பிர­த­மர் மோடி கூறி­னார்,” என்று திரு எடி­யூ­ரப்பா தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, ஒடிசா, மகா­ராஷ்­டிரா ஆகிய மாநி­லங்­கள் முடக்­க­நி­லையை ஏப்­ரல் 30 ஆம் தேதி வரை நீட்­டிப்­ப­தாக அறி­வித்­துள்­ளன. அதே­போல் மே 1 ஆம் தேதி வரை முடக்­க­நி­லையை நீட்­டிப்­ப­தாக பஞ்­சாப் மாநி­லம் அறி­வித்­துள்­ளது. இந்த நிலை­யில், மேற்கு வங்­கா­ளத்­தில் ஜூன் 10 ஆம் தேதி வரை பள்­ளி­கள் மூடப்­ப­டு­வ­தாக அம்­மா­நில முதல் மந்­திரி மம்தா பானர்ஜி அறி­வித்­துள்­ளார்.

முடக்­க­நிலை உத்­த­ரவை ஏப்­ரல் 30 வரை நீட்­டிக்க பிர­த­மர் மோடிக்கு அவர் கோரிக்கை விடுத்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், இந்­தி­யா­வில் முடக்­க­நிலை உத்­த­ரவு இல்­லா­மல், கொரோனா கட்­டுப்­பாடு நட­வ­டிக்­கை­கள் மட்­டும் எடுக்­கா­தி­ருந்­தால் இம்­மா­தம் 15ஆம் தேதிக்­குள் 200,000 பேர் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பர் என்று மத்­திய சுகா­தா­ரத்­துறை இணைச் செய­லா­ளர் லாவ் அகர்­வால் தெரி­வித்­தார்.

இந்­திய அரசு உட­ன­டி­யாக முடக்­க­நிலை அறி­வித்­த­தால் நட­கக்­க­வி­ருந்த மிகக் கடு­மை­யான பாதிப்­பி­லி­ருந்து இந்­தியா தப்­பி­ய­தாக தெரி­விக்­கப்­பட்­டது. இருப்­பி­னும், கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான போர் தொடர்­வ­தாக இந்­திய அதி­கா­ரி­கள் கூறி­னர். இந்­தி­யா­வில் இது­வரை 170,000க்கும் மேற்­பட்ட கொரோனா பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­பட்­டுள்­ளன அவர் கூறி­னார்.

இந்­தி­யா­வில் கிரு­மித்­தொற்று கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 7,529ஆக உயர்ந்­துள்­ளது என்று மத்­திய சுகா­தா­ரத்­துறை அமைச்­சக தர­வு­கள் தெரி­வித்­துள்­ளன. பாதிப்­பில் இருந்து மீண்­ட­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் 653ஆக உயர்ந்­துள்­ளது.

கொரோனா கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை 242 ஆக அதி­க­ரித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!