நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதற்கு சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் எதிர்ப்பு

மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் தொடர்ந்து சூது இருப்பதாக நம்பப்படுகிறது. அவர் மிகவும் தைரியமானவர். தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவர் கோழை அல்ல என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மும்பை போலி சார் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடர்பில் ஐம்பது பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். ஆனால் பீகாரில் வசித்துவரும் அவரது தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் பாட்னா போலிசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் பீகார் அரசு, சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தது. இதனை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனால் மும்பை போலிசாரிடமிருந்து வழக்கு சிபிஐ கைக்கு மாறியுள்ளது.

இது குறித்து பேசிய சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் எம்பியு மான சஞ்சய் ராவத், “நாங்கள் சிபிஐ விசாரணையை எதிர்க்க வில்லை. மும்பை போலிசார் ஏற் கெனவே தங்கள் பணியை செய்து வருகின்றனர். இதில் சிபிஐ மேற் கொண்டு என்ன செய்யப் போகிறது. இந்த விவகாரத்தில் சுஷாந்தின் குடும்பத்தினர் உட்பட அனைவரும் சற்று அமைதி காக்கவேண்டும். சுஷாந்துக்கு நீதி கிடைக்க மும்பை போலிசார் தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்,” என்று அவர் கோரிக்கை விடுத்து உள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon